சிற்றுண்டி வாங்க வந்த சிறுமியை 'தொட்டு' மானபங்கம்: 63 வயது துப்புரவு ஊழியர் கைது

சிற்றுண்டி வாங்க வந்த சிறுமியை 'தொட்டு' மானபங்கம்: 63 வயது துப்புரவு ஊழியர் கைது

1 mins read
1e7f1055-dc0e-42b8-bb74-2a2d8a05ba23
-

சுவா சூ காங்­கில் சிறுமி ஒரு­வரை மான­பங்­கம் செய்த சந்­தே­கத்­தின் பேரில் 63 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

புளோக் 803 கியட் ஹொங் குளோஸ் பகு­தி­யில் இச்­சம்­ப­வம் நடை­பெற்­ற­தாக திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 12.49 மணிக்கு தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய சிறு­மி­யின் வயது 10 என 'ஸ்டோம்ப்' இணை­யச் செய்தி குறிப்­பிட்­டது.

பிடி­பட்ட ஆட­வர் அந்த புளோக்­கில் உள்ள காப்­பிக் கடை ஒன்­றில் துப்­பு­ரவு வேலை செய்து வந்­த­தா­க­வும் அச்­செய்தி தெரி­வித்­தது.

சிறு­மி­யின் தாயார் ஜோயென் என்­ப­வர் தமது இரு மகள்­களும் காலை உணவு வாங்­கக் கடைக்­குச் சென்­ற­தா­கக் கூறி­னார்.

அப்­போது அச்­சி­று­மி­ய­ரில் ஒரு­வரை அந்த ஆட­வர் தமது வீட்­டுக்கு அழைத்­த­தா­க­வும் ஆனால் அதற்கு மறுத்த சிறு­மி­யின் மார்­புப் பகு­தியை ஆட­வர் தொட்­ட­தா­க­வும் அவர் கூறினார்.

சிறுமியரான மகள்கள் இரு­வரும் ஓடி வந்து, நடந்தவற்றைத் தம்­மி­டம் விளக்கிக் கூறியதாக வும் அப்பெண் தெரிவித்தார்.

ஜோயெ­னும் அதே பகு­தி­யில் வேலை செய்­வ­தா­கக் கூறப்­பட்­டது. மானபங்கச் சம்­ப­வம் குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.