பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணரமுடிகிறது

சிங்­கப்­பூ­ரில் 40 ஆண்­டு­கள் இல்­லாத அள­விற்கு 37 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பம் மே 13ஆம் தேதி பதி­வா­னது. 1980களில் இருந்து பார்க்­கும்­போது அதி­க­மான மழைப்­பொ­ழிவு பெற்ற ஆண்­டு­களில் 2022ஆம் ஆண்­டும் ஒன்று.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் அறி­வி­யல் விளை­வு­களை முழு அள­வில் மக்­கள் முழு­மை­யாக அனு­பவிக்­கத் தொடங்கிவிட்­டார்­கள். நாம் இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று கூறி­னார். இந்­தப் பரு­வ­நிலை மாற்­றத்­தின் தாக்­கத்தை எதிர்­கொள்ள மற்­றும் கரிம வெளி­யேற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் என்­னென்ன செய்­கிறது என்­பதை அவர் கூறி­னார்.

திரு டெஸ்­மண்ட் லீ சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்­தில் நடக்­கும் சுற்­றுச்­சூ­ழல் வார மாநாட்­டின் இரண்­டாம் நாளில் பேசும்­போது, “சிங்­கப்­பூ­ரின் மொத்த கரிம வெளி­யேற்­றத்­தில் 20 விழுக்­காட்டை வீடு­கள், அலு­வ­ல­கங்­கள் போன்ற கட்­ட­டங்­கள் வெளி­யி­டு­கின்­றன. அந்த கரிம வெளி­யேற்­றத்தை நாம் சில வழி­களில் குறைக்­க­லாம். அவை, பசுமை ஆற்­ற­லின் ஆதா­ரத்­தில் இருந்து வரும் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­தல், நிலை­யான நக­ரங்­கள், மாவட்­டங்­கள் மற்­றும் கட்­ட­டங்­களை உரு­வாக்­கு­தல்,” என்று கூறி­னார்.

நக­ர­ம­ய­மாக்­கல் கார­ண­மாக நம்­மால் இந்­தக் கரிம வெளி­யேற்­றத்­தின் அள­வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. எனவே, அதைக் கட்­டுப்­ப­டுத்த புது­மை­யான வழி­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது முக்­கி­யம். சிங்­கப்­பூ­ரின் பசு­மைக் கட்­ட­டத்­திற்­கா­ன சிறப்­புத் திட்­டத்தை அவர் இங்கு குறிப்­பிட்­டார்.

80% கட்­ட­டங்­க­ளின் மொத்த தரை பரப்­ப­ள­வைப் பசு­மை­யாக்கு­வது. 2030ஆம் ஆண்­டுக்­குள் 80% புதிய கட்­ட­டங்­களை மிகக் குறைந்த ஆற்­ற­லால் இயங்­கும் கட்­ட­டம் என்று வகைப்­ப­டுத்­து­வது ஆகி­யவை இந்த திட்­டத்­தின் குறிக்­கோள்­கள் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

2030ஆம் ஆண்­டுக்­குள் ஆராய்ச்சி, மேம்­பாடு ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் சிறந்த தர­நிலை வாய்ந்த பசுமை கட்­ட­டங்­க­ளின் ஆற்­றல் திறனை 80% மேம்­படுத்து­வதே மூன்றாவது இலக்கு.

ஜூரோங் லேக் வட்­டா­ரம் நிலைத்­தன்­மைக்கு முன்­னு­ரிமை அளித்து உரு­வாக்­கப்­பட்­டது என்று அந்த வட்­டா­ரத்தை முன்­னி­லைப்­ப­டுத்­திக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!