தேசிய அரும்பொருளக நிரந்தரக் காட்சிக் கூடங்களின் மறுசீரமைப்புப் பணிகளில் மக்களின் பங்கேற்பு

சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் நிரந்­த­ரக் காட்­சிக்­கூ­டங்­க­ளின் பெரிய அள­வி­லான மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் தொடர்­பில் தங்­கள் கருத்­து­க­ளை பொது­மக்­கள் பதிவு செய்­ய­லாம்.

மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் வரும் செப்­டம்­பர் மாதம் முதல் 2026 இறுதி வரை நடை­பெ­றும்.

தனது நிரந்­த­ரக் காட்­சிக்­கூடங்­க­ளான இரண்­டாம் தளத்­தில் உள்ள ஐந்து காட்­சிக் கூடங்­கள், வட்­ட­மான கண்­ணா­டிக் காட்­சிக்­கூ­டம், சிங்­கப்­பூர் வர­லாற்­றுக் காட்­சிக்­கூ­டம் ஆகி­யவை பல்­வேறு கால­கட்­டங்­களில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்­காக மூடப்­படும்.

முதற்­கட்­ட­மாக இரண்­டாம் தளத்­தில் உள்ள காட்­சிக்­கூ­டங்­கள் செப்­டம்­பர் 4ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கம் நேற்று தெரி­வித்­தது.

ஆனால், சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ளகம் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளின்­போது திறந்­தி­ருக்­கும். பாதிக்­கப்­பட்ட காட்­சிக்­கூ­டங்­கள் கடை­சி­யாக மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு, 2010ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் திறக்­கப்­பட்­டன.

மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் தொடர்­பாக தங்­க­ளின் கருத்­தைத் தெரிவிப்பதன் மூலம் பங்கு­தா­ரர்­களும் பொது­மக்­களும் ஈடு­படுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் இதன் மூலம் பல­த­ரப்­பட்ட கருத்­து­களை ஒன்­றி­ணைத்து அனை­வ­ரும் விரும்­பும் காட்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதே தனது விருப்­பம் என்­றும் அரும்­பொ­ரு­ள­கம் விவ­ரித்­தது.

சிங்­கப்­பூர் வர­லாற்­றுக் காட்­சிக்­கூ­டத்­தி­னுள், செல்­லும் ஐம்­பது மீட்­டர் நீளம் கொண்ட உயர்த்­தப்­பட்ட நடை­பா­தை­யு­டைய அரும்­பொ­ரு­ள­கத்­தின் 15 மீட்­டர் உய­ர­முள்ள வட்­டக் கண்­ணாடி குவி­மா­டத்­தில் தீவி­ர­ மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

அது 2024 இரண்­டாம் பாதி­யி­லி­ருந்து 2025 ஆகஸ்ட் வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

1887ல் திறக்­கப்­பட்ட அரும்­பொ­ரு­ள­கத்­தின் பிர­தான கட்­ட­டம் தனது மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளைத் தொடங்­கும். அது செப்­டம்­ப­ரில் தொடங்கி, 2025ல் நிறை­வு­பெ­றும்.

மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளின்­போது, அரும்­பொ­ரு­ள­கத்­தின் நுழை­வா­யில்­கள் தற்­கா­லி­க­மாக மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்­றும் அது பற்­றிய விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும் என்றும் கூறப்படுகிறது.

அரும்­பொ­ரு­ள­கக் காட்­சிக்­கூடங்­க­ளின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் பற்றி கருத்து கூற விரும்­பு­வோர் go.gov.sg/nmsengageinterest எனும் இணை­யத் தளத்­தில் தெரி­விக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!