உபி பகுதியில் நேற்று மதியம் வெள்ளைநிற கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அந்த கார் ஆவ்டி ஆர்8 வகையைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. இச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.
"எங்களுக்கு நேற்று மதியம் 2.30 மணியளவில் ஏர்போர்ட் ரோட்டில் கார் தீப்பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற நாங்கள் காற்று நுரையைப் பீய்ச்சியடித்து அந்த தீயை அணைத்தோம். காரில் தீ எப்படி பிடித்தது என்பதை பற்றி விசாரித்து வருகிறோம்," என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
"2022ஆம் ஆண்டில் 204 வாகனங்களில் தீப்பிடித்துக்கொண்டது. இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 31.6 % அதிகம்.
"2021ஆம் ஆண்டில் 155 வாகனங்களில் தீப்பிடித்துக்கொண்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் 2022ல் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டது.
"2022ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையின் அளவு பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்னர் இருந்த அளவை ஒத்திருக்கிறது," என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.