கேலாங்கில் 43 பேர் பிடிபட்டனர்

குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு, மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு உள்­ளிட்ட அமைப்­பு­கள் சென்ற மாதம் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி­வரை கேலாங் பகு­தி­யில் மேற்­கொண்ட அதி­ர­டிச் சோத­னை­களில் 43 பேர் பிடி­பட்­ட­னர்.

சட்­ட­வி­ரோ­தச் சூதாட்­டம், பாலி­யல் உறவு சார்ந்த பொருள்­கள் விற்­பனை உள்­ளிட்­டவை தொடர்­பில் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கக் காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

அவர்­களில் ஒன்­பது பெண்­கள் உட்­பட 11 பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

சட்­ட­வி­ரோ­தச் சூதாட்­டம் தொடர்­பில் 39 முதல் 75 வய­திற்­குட்­பட்ட 18 பேர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து 3,400 வெள்­ளிக்­கும் அதி­க­மான ரொக்­கம், கணி­னி­கள், சூதாட்­டம் சார்ந்த பொருள்­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன.

அத்­து­டன், பதி­வு­செய்­யப்­ப­டாத, $37,440 மதிப்­பு­டைய இரு­மல் மருந்­தை­யும் பாலி­யல் உற­வைக் கூட்­டும் பொருள்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­தனர். இதன் தொடர்­பில் 32 மற்றும் 51 வய­து­டைய ஆட­வர் இரு­வர் உடல்­நல உற்­பத்­திப் பொருள்­கள் சட்­டத்­தின்­கீழ் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

36 மற்­றும் 60 வய­து­டைய ஆட­வர் இரு­வர் செல்­லத்­தக்க உரி­ம­மின்றி உடல்­த­ளர்த்­தும் நிலை­யங்­களை நடத்தி வந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

பொதுக் கேளிக்கை நிலை­யங்­களில் சோத­னை­யிட்­ட­போது, சங்­கங்­கள் சட்­டத்­தின்­கீழ் 26 வயது ஆட­வர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

கள்ள சிக­ரெட் தொடர்பில் 64 வயது ஆட­வர் ஒரு­வரை சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கைது­செய்­த­னர்.

சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் உரி­ம­மின்றி 60 வயது ஆட­வர் ஒரு­வர் ‘சாத்தே’ உணவு விற்­பனை செய்­து­வந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

தனி­ந­பர் நட­மாட்ட சாத­னங்­களை­யும் மின்­சா­ர மிதி­வண்­டி­களை­யும் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்றி­ய­மைத்­தது தொடர்­பில் 20 முதல் 30 வய­திற்­குட்­பட்ட ஆட­வர் அறு­வர் சிக்­கி­னர்.

வெளி­நாட்டு ஊழி­யரை வேலைக்கு அமர்த்­தும் சட்­டத்­தின்­கீழ், 36 மற்­றும் 40 வய­து­டைய ஆட­வர் இரு­வர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!