குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விரிவுரையாளர் வெளிநாடு செல்ல அனுமதி

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விரிவுரையாளர் வெளிநாடு செல்ல அனுமதி

1 mins read
38dd60e6-a8f6-45d2-90ec-0a5b3cd495bf
-

முன்­னாள் தேசிய பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் ஒரு­வர் மீது மான­பங்­கக் குற்­ற­சாட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், அவர் வெளி­நாடு செல்ல மாவட்ட நீதி­மன்­றம் ஒன்று அனு­மதி அளித்­துள்­ளது. ஜெரமி ஃபெர்னாண்டோ என்ற அந்த விரி­வு­ரை­யா­ளர் தான் போர்ச்­சு­கல் தலை­ந­கர் லிஸ்­ப­னில் ஜூன் மாதம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி­வரை 'ஹேங்­கர் ஆர்­டிஸ்­டிக் சென்­டர்' என்ற இடத்­தில் தங்கி அங்கு நடை­பெ­றும் கல்வி ஆராய்ச்­சி­யில் பங்­கேற்க உள்­ள­தா­கக் கூறி லிஸ்­பன் செல்ல நேற்று நீதி­மன்­றத்­தில் அனு­மதி கோரி­னார்.

இதற்கு அனு­மதி அளித்த மாவட்ட நீதி­மன்­றம் ஒன்று அவர் தமது முழுப் பய­ணத் திட்­டத்­தை­யும் காவல்­துறை அதி­கா­ரி­யி­டம் தெரி­விக்க வேண்­டு­மென்று கூறி­யது. மேலும், அவர் திரும்பி வந்த ஒரு நாளைக்­குள் தமது பாஸ்­போர்ட்டை அதி­கா­ரி­க­ளி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் நிபந்­தனை விதித்­தது.

திரு ஜெரமி ஃபெர்னாண்டோ, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மாது ஒரு­வ­ரின் உதட்­டில் முத்­த­மிட்­ட­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இது குறித்து காவல் துறை­யில் பல்­க­லைக்­கழகம் புகார் செய்­துள்­ளது.