தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு இல்லாத அளவில் விசாக தின வாரயிறுதியில் 1.5 மி. பேர் நிலவழி எல்லைகளைக் கடந்தனர்

1 mins read
4bbb5ef8-dc90-4ada-a15e-f786775f7b7b
காஸ்வே கடற்பாலம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூன் மாதம் ஒன்றிலிருந்து நான்காம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வந்த விசாக தின நீண்ட வாரயிறுதியில் அதிகமான பயணிகள் நிலவழி எல்லைகளைக் கடந்திருக்கின்றனர்.

அந்தக் காலகட்டத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளை சுமார் 1.5 மில்லியன் பயணிகள் கடந்ததாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தைத் தொடர்ந்து சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர்-மலேசிய நிலவழி எல்லைகள் மீண்டும் திறந்துவிடப்பட்டன.

அதற்குப் பிறகு ஒரு நீண்ட வாரயிறுதியில் இத்தனை பயணிகள் நிலவழி எல்லைகளைக் கடந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் ஆணையம் குறிப்பிட்டது