தர்மனுக்கு என்டியுசி ஆதரவு

இவ்­வாண்டு நடை­பெ­ற­வி­ருக்­கும் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தாக மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், 66, அறி­வித்­துள்ள நிலை­யில், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) பேரா­த­ரவு தெரி­வித்­தி­ருக்­கிறது.

இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், “சகோ­த­ரர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், நம் ஊழி­யர்­கள் மீதும் தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் மீதும் அக்­கறை கொண்ட ஒரு தலை­சி­றந்த அர­சி­யல் மேதை,” என்று புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

மூத்த அமைச்­ச­ரும் சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்­மன், அதி­பர் தேர்­த­லில் தாம் போட்­டி­யிட நோக்­கம் கொண்­டுள்­ளது பற்றி ஏற்­கெ­னவே குறிப்­பால் உணர்த்­தி­யி­ருந்­த­தாக திரு இங் குறிப்­பிட்­டார்.

“இது உறு­தி­யாக அற்­பு­த­மான செய்தி. திரு தர்­ம­னின் இந்த முடிவை வர­வேற்று, முழு மனத்­து­டன் அவ­ருக்­குத் துணை நிற்­கும் சக சகோ­தர, சகோ­த­ரி­க­ளின் உணர்வை நான் எதி­ரொ­லிக்­கி­றேன்,” என்று திரு இங் கூறி இருக்­கி­றார்.

திரு தர்­மன் என்­டி­யுசி அமைப்­பின், நமது தொழிற்­சங்­கத் தலை­வர்­க­ளின் நீண்­ட­கால நண்­பர் எனக் குறிப்­பிட்ட அவர், அவ­ரது நம்­ப­மு­டி­யாத தொலைநோக்­கும், பேர­றி­வும், அர­வ­ணைப்­பும், பணி­வும் கடந்த சில பத்­தாண்­டு­களில் தொழிற்­சங்­கத் தலை­வர்­களுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பெரும்­ப­யனை நல்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நெருக்­கடி உச்­சத்­தின்­போது திரு தர்­ம­னு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மறக்க முடி­யாத அனு­ப­வம் எனக் குறிப்­பிட்­டார் திரு இங்.

“ஒரு­நாள் காலை­யில் தேசிய வேலை­கள் மன்­றம் முதன்­மு­றை­யா­கக் கூடி­யது. மெய்­நி­கர் வழி­யில் நடந்த அக்­கூட்­டத்­திற்­குத் திரு தர்­மன் தலைமை வகித்­தார். பெருந்­தொற்­றுக் காலத்­தின்­போது நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­களுக்­கும் கூட்­டாக உத­வு­வது எப்­படி என்­பது குறித்து ஆராய நான் உட்­பட தொழிற்­சங்­கம், அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள், வணி­கர் சங்­கங்­கள் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­கள் கூடி­யி­ருந்­தோம். அது எதிர்­பா­ராத சவால். அப்­போது வலி­மை­யின் கலங்­கரை விளக்­க­மா­க­வும் எங்­கள் பல­ரது நம்­பிக்­கை­யா­க­யா­க­வும் திரு தர்­மன் திகழ்ந்­தார்.

“சகோ­த­ரர் தர்­மன் தெளி­வான நோக்­கு­டன், பொது­வான இலக்­கு­களை அடை­வ­தில் வெவ்­வேறு ஆர்­வம் கொண்ட பல்­வேறு தரப்­பி­னரை திற­மை­யாக ஒருங்­கிணைத்­தார். தேசிய அள­வி­லான இம்­மு­யற்­சி­யில் நெருங்­கிய ஒத்­து­ழைப்­பின்­மூ­லம் வெற்­றியை அடை­வது எப்­படி என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். நடுத்­தர வயது, முதிய ஊழி­யர்­க­ளி­டத்­தில் கூடு­தல் அக்­கறை செலுத்­தும்­படி அவர் அறி­வு­றுத்­தி­னார்,” என்று திரு இங் நினை­வு­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கா­க­வும் சிங்­கப்­பூரர்­க­ளுக்­கா­க­வும் முன்­வந்­தி­ருப்­ப­தற்­கா­கத் திரு தர்­ம­னுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்ட திரு இங், நமது தொழிற்­சங்­கங்­களும் சமூக நிறு­வ­னங்­களும் அவ­ருக்­குப் பேரா­த­ரவு வழங்­கு­வ­தாக உறுதி அளிக்­கின்­றன என்­றும் பதி­விட்டு இருக்­கி­றார்.

தலை­வர்­கள் புக­ழா­ரம்

அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெ­ற­வுள்ள திரு தர்­ம­னுக்­குத் தலை­வர்­கள் பல­ரும் புகழ்­மாலை சூட்­டி­யுள்­ள­னர்.

மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், “25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நாங்­கள் அணுக்­க­மாக இணைந்து பணி­யாற்­றி­யுள்­ளோம். தாய்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் அவர் சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை தேடித்­தந்­துள்­ளார். புதிய பொறுப்­பி­லி­ருந்­த­படி நாட்­டிற்­கும் நம் மக்­க­ளுக்­கும் சேவை­யாற்ற விழை­யும் அவ­ருக்கு என் வாழ்த்­து­கள்,” என்று தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­களுக்­கும் பல ஆண்­டு­க­ளாக அர்ப்­ப­ணிப்­பு­டன் சேவை­யாற்­றி­ய­வர் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் குறிப்­பிட்­டுள்­ளார்.

“நான் அர­சி­ய­லில் நுழைந்­த­போ­தும் மனி­த­வள அமைச்­சில் இருந்­த­போ­தும் தனிப்­பட்ட அள­வில் உங்­க­ளது ஆலோ­ச­னைக்­கும் வழி­காட்­டு­த­லுக்­கும் நன்றி,” என்று தமது ஃபேஸ்புக் பதி­வில் திரு டான் கூறி­யி­ருக்­கி­றார்.

ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யின் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களான திருவாட்டி ரஹாயு மஹ்­ஸா­மும் திரு சீ யாவ் சுவா­னும் திரு தர்­ம­னுக்­குப் புக­ழா­ரம் சூட்டி­இருக்கின்றனர்.

‘வெற்றிக் கணக்கு’

அதி­பர் தேர்­தலில் மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கத்­தின் துருப்­புச்­சீட்­டாக மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் விளங்­கு­வார் என்று அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கணித்­துள்­ள­னர்.

ஆயினும், திரு தர்­மனுக்கு இருக்­கும் மக்­கள் செல்­வாக்­கால் அதி­பர் தேர்­த­லில் மற்­ற­வர்­கள் போட்­டி­யி­டத் தயங்­க­லாம் என்­றும் திரு தர்மன் போட்­டி­யின்­றித் தேர்­வு­ செய்­யப்­ப­ட­லாம் என்­றும் அவர்­கள் கரு­து­கின்­ற­னர்.

“மசெ­க­விற்கு இத­னை­விட சிறந்த வெற்­றிக் கணக்கு இருக்க முடி­யாது,” என்று கூறி­யுள்­ளார் அர­சி­யல் பார்­வை­யா­ள­ரும் முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு ஸுல்­கி­ஃப்லி பகாரு­தீன்.

இன, சமூக-பொரு­ளி­யல் நிலை, அர­சி­யல் கட்சி சாராது திரு தர்­ம­னுக்­குப் பரந்­து­பட்ட செல்­வாக்கு இருப்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் நான்­கா­வது பிர­த­ம­ரா­கத் தங்­க­ளின் முதன்­மை­யான தெரிவு திரு தர்­மன்­தான் என்று 2016ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் ஆத­ரவு தெரி­வித்து இருந்­த­தும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கிறது.

பல அனைத்­து­லக அமைப்பு­களில் பங்­காற்றி இருப்­ப­தால் திரு தர்­ம­னுக்கு அனைத்­து­லக அள­வி­லும் நன்­ம­திப்பு உள்­ளது என்­றார் அர­சி­யல் பகுப்­பாய்­வா­ள­ரும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக இணை விரி­வு­ரை­யா­ள­ரு­மான டாக்­டர் ஃபெலிக்ஸ் டான்.

“அடுத்ததாக, அவ­ருக்கு உள்­நாட்­டி­லும் பெரும் செல்­வாக்கு இருக்­கிறது. பொதுத் தேர்­தல் முடி­வு­க­ளைப் பார்த்­தால், அவ­ரது குழுத்­தொகுதியில்தான் அதிக வாக்கு வித்­தி­யா­சம் இருப்­ப­தைக் காண­லாம்,” என்று டாக்­டர் டான் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் திரு தர்­ம­னைக் கட்சி சார்ந்து பாரா­மல், அவரை ஒரு பேரா­ளு­மை­யா­கக் காண்­ப­தா­கச் சொன்­னார் ‘போவெர் குரூப் ஏஷியா’ கொள்கை ஆலோ­சனை நிறு­வனத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் நிடியா நியோவ்.

இடைத்தேர்தல் நடக்குமா?

அடுத்த மாதம் 7ஆம் தேதி­யுடன் திரு தர்­மன் பதவி விலக­வுள்­ளதையடுத்து, அவர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள ஜூரோங் குழுத்­தொ­கு­திக்கு இடைத்­தேர்­தல் நடத்­தப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. குழுத்­தொ­குதியில் சிறு­பான்மையின நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் அதிபர் தேர்­த­லில் நிற்­ப­தற்­காகப் பதவி வில­கி­னால் அத்­தொ­கு­தி­யில் இடைத்­தேர்­தல் நடத்­தப்­ப­டுமா என்று இப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வர் பிரித்­தம் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு நாடாளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு, அப்­படி நடந்­தால் இடைத்­தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டு­மென அவ­சி­ய­மில்லை என்று அப்­போ­தைய பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் சான் சுன் சிங் பதி­ல­ளித்­து இருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!