'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ஆட்குறைப்பு'

1 mins read
80a53462-3f1b-4bcb-983c-3717f163e2d7
-

சிங்­கப்­பூர், லண்­டன், ஹாங்­காங் ஆகிய நாடு­களில் உள்ள தனது கிளை­களில் ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி ஆட்­கு­றைப்பு செய்யலாம் என்று தக­வல்­கள் தெரி­விக்கின்­றன.

2024ஆம் ஆண்டு வரை ஏறக்­கு­றைய ஒரு பில்­லி­யன் டாலர் வரை செல­வுக் குறைப்பு நட­வ­டிக்­கை­களை இவ்­வங்­கி­எடுக்­கிறது. அதில் ஒரு பகு­தி­யாக ஆட்­கு­றைப்­பும் இடம் பெறு­கிறது.

கடந்த சில வாரங்­க­ளாக மனி­த­வ­ளம், மின்­னி­லக்க உரு­மாற்­றம் போன்ற துறை­களில் இடை­நிலை அலு­வ­லக ஊழி­யர்­களைக் குறைத்து வரு­கிறது என்று வங்­கி­யின் நட­வ­டிக்­கை­களை நன்கு அறிந்த, பெயர் தெரி­விக்க விரும்­பா­த­வர்­கள் கூறி­னர். லண்­டன் நிதிச் சந்­தை­யில் உள்ள ஒரு சில நிர்­வாக இயக்­கு­நர்­களும் வீட்­டுக்கு அனுப்­பப்­ப­ட­லாம் என ஒரு­வர் கூறி­னார். சில இளம் அதி­காரிகளும் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். ஒட்­டு­மொத்­த­மாக 100க்கும் மேற்­பட்­டோர் வேலையை இழப்­பார்­கள் என்­றும் இறுதி எண்­ணிக்கை இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் தக­வ­ல­றிந்­த­வர்­கள் கூறி­னர். ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யின் பேச்­சா­ளர் ஒரு­வர், "எங்­க­ளு­டைய வங்­கி­யின் தேவை­களை மதிப்­பாய்வு செய்­வது வழக்­க­மான வணி­கச் செயல்­பாட்­டின் ஒரு பகுதி," என்­றார்.