கெப்பல் கிளப் இருந்த இடத்தில் பழங்கால கட்டட அடையாளங்கள்

2 mins read
80a633db-042d-4f74-94d5-707c579e9a1e
-

முன்பு கெப்­பல் கிளப் இருந்த இடத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட அக­ழாய்­வுப் பணி­யில் ஒரு சில கலைப் பொருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் அவை வர­லாற்று முக்­கி­யத்­தும் வாய்ந்­தது அல்ல என்­பது தெரிய வந்­துள்­ளது. இருந்­தா­லும் அந்த இடத்­தின் வர­லாற்­றுக் கண்­டு­பி­டிப்­பு­கள் முறைப்­படி ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

மேலும் இவ்­வட்­டா­ரத்­தில் மேற்­கொள்­ளப்­படும் மேம்­பாட்­டுத் திட்­டங்­களில் கண்­டு­பி­டிப்­பு­களை எப்­படி பயன்­ப­டுத்துவது என்­ப­தும் ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கிறது.

சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் அக­ழாய்­புப் பணி­க­ளு­டன் வர­லாற்­றுச் சிறப்­பு­க­ளைக் கண்டு பிடிக்­கும் ஆய்வு தொடங்­கப்­பட்­டது.

இதில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகச் சில கலைப்­பொ­ருள்­கள் ஆர்­வ­மிக்­க­வை­யாக இருந்­தா­லும் அதிக வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தவை அல்ல என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தனது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பெரும்­பா­லான பொருள்­கள் 1900களில் பழைய அலெக்­சாண்­டிரா செங்­கல் சூளை­யில் தயா­ரிக்­கப்­பட்ட செங்­கற்­கள் ஆகும்.

அலெக்­சாண்­டிரா என்ற பெய­ரில் செயல்­பட்ட சூளை­யில் தயா­ரிக்­கப்­பட்ட செங்­கற்­கள் சிங்­கப்­பூ­ரில் பொது­மக்­க­ளுக்­கான கட்­டு­ மா­னத் திட்­டங்­க­ளுக்­குப் பயன் ­ப­டுத்­தப்­பட்­டன.

அது­மட்­டு­மல்­லா­மல் பழ­மைக்­கா­கப் பாது­காக்­கப்­படும் அரு­கி­லுள்ள புக்­கிட் செர்­மின் கட்­ட­டத்தை ஒத்­துள்ள அடித்­த­ளத்­தின் எச்­சங்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளன.

ஆய்­வின் கண்­டு­பி­டிப்­பு­கள் கெப்­பல் கிளப் மற்­றும் அங்கு நடந்த கடந்த கால செயல்­பா­டு ­க­ளைப் புரிந்­து­கொள்ள உத­வுகிறது என்று திரு டெஸ்­மண்ட் லீ கூறி­னார்.

கெப்பலுக்கான திட்டங்களில் இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளைப் புகுத்துவது குறித்து சாத்தியமான வழிகளை அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றார் அவர்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் கெப்பல் கிளப் இருந்த 48 ஹெக்டர் நிலப்பரப்பில் 9,000 வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் 6,000 பொது குடியிருப்பு வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படவுள்ளன.

இந்த இடத்தில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இது பற்றிய விற்பனை அறி விப்பு மூன்று ஆண்டுகளுக்குள் வெளியிடப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.