மரின் பரேட் 'பாப்புலர்' புத்தகக் கடைக்கு வாடிக்கையாளர்கள் பிரியாவிடை

மரின் பரேட் 'பாப்புலர்' புத்தகக் கடைக்கு வாடிக்கையாளர்கள் பிரியாவிடை

2 mins read
9653cd89-eb6c-4eb6-b077-548b15d2ff50
-
Google News Preferred Icon

இல்­லத்­த­ரசி லிம் சொக் எங், 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக மரின் பரேட்­டில் உள்ள 'பாப்­பு­லர்' புத்­த­கக் கடைக்­குச் சென்று சமை­யல் புத்­த­கங்­கள், எழு­துபொ­ருள்­கள் போன்­ற­வற்றை அவ்­வப்­போது வாங்­கு­வார்.

அந்­தக் கடை­ பற்றி அவ­ருக்குப் பல இனி­மை­யான நினை­வு­கள் உள்­ளன. அவர் தம் இரண்டு மகன்­கள் படித்­துக்­கொண்­டி­ருந்த காலத்­தில் பாடப் புத்­த­கங்­களை வாங்­கு­வ­தற்­காக அவர்­களை அங்கு அழைத்­துச் செல்­வார். இப்­போது அவ­ரு­டைய மகன்­கள் தங்­கள் 40களில் உள்­ள­னர்.

சுமார் 25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக செயல்­பட்டு வந்த மரின் பரேட் பாப்­பு­லர் கடை, ஜூன் 18ஆம் தேதி மூடப்­ப­ட­வி­ருக்­கிறது.

"இங்கு வந்­த­போ­து­தான் கடை மூடப்­ப­ட­வி­ருப்­பதை அறிந்­தேன். அத­னால் எனக்கு மன­வருத்­த­மாக இருக்­கிறது," என்று 69 வய­தான திரு­வாட்டி லிம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கூறி­னார்.

நேற்­றுக் காலை கடை திறக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அதன் நுழை­வா­யி­லில் நின்­று­கொண்­டு இ­ருந்த 20 வாடிக்­கை­யா­ளர்­களில், ஜூ சியட்டில் வசிக்கும் திரு­வாட்டி லிம்­மும் ஒரு­வர்.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் நினை­வு­களை ஒரு தாளில் எழுதி, கடை­யின் சுவ­ரில் ஒட்­டு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

ஜூன் 18ஆம் தேதி­வரை இறுதிக்­கட்ட விற்­பனை நடை­பெ­று­ம் என்றும் அதில் சில பொருள்­களுக்கு 90 விழுக்­காடு வரை கட்­ட­ணக் கழிவு இருக்கும் என்றும் ­ஜூன் 2ஆம் தேதி பாப்பு­லர் அதன் ஃபேஸ்புக் பக்கத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது.

புத்­த­கங்­க­ளு­டன் தின்­பண்­டங்­கள், தக­வல் தொழில்­நுட்­பப் பொருள்­கள் போன்­ற­வையும் அந்தக் கடை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் கிழக்­குப் பகுதி­யில் வசிக்­கா­த­வர்­களும் அந்தக் கடைக்­குச் சென்­றுள்­ள­னர்.

அண்மை ஆண்­டு­களில் பாப்­பு­லர் அதன் கடை­களில் சில­வற்றை மூடி­யுள்­ளது. 2019ஆம் ஆண்­டில் தாம்­சன் பிளா­சா­வில் ஒன்­றும் 2021ஆம் ஆண்­டில் ஐஎம்­எம் கடைத்­தொ­கு­தி­யில் ஒன்­றும் மூடப்­பட்­டன.

இன்று தீவு முழு­வ­தும் 28 கடை­கள் உள்­ள­தாக பாப்­பு­லர் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.