வெப்பத்தைச் சமாளிக்க புதிய வழிகாட்டி

1 mins read
03137df3-dd35-48e3-8e6a-b0e82cd5bbcc
-

வெப்­ப­மான வானி­லை­யில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்­கும் அதி­கா­ர­பூர்வ வழி­காட்டி ஒன்று வரும் வாரங்­களில் வெளி­யி­டப்­படும்.

பரு­வ­நிலை மாற்­றத்­து­டன் கூடிய 'எல் நினோ' வானிலை விளை­வால் வெப்­பம் கடு­மை­யாவதற்கு சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது.

வெப்­பத் தாக்­கம் குறித்து ஆலோ­சனை வழங்­கும் அந்த வழி­காட்டி, மக்­கள் தங்­கள் நட­வடிக்­கை­க­ளுக்கு எவ்­வாறு திட்­ட­மி­ட­லாம், என்­னென்ன பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும், வானி­லை­யைப் பொறுத்து வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட என்ன மாதி­ரி­யான உடை­களை அணிய வேண்­டும் என்ப­ன­வற்றை விவ­ரிக்­கும்.

நீடித்த நிலைத்தன்மையுடைய உலக வளங்­கள் குறித்து நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ இந்த விவ­ரங்­க­ளைப் பகிர்ந்­தார்.

இந்த வழி­காட்டி குறித்த மேல்­வி­வ­ரங்­கள் வரும் வாரங்­களில் வெளி­யி­டப்­படும் என்­றார் அவர்.

"அதிக வெப்ப பாதிப்பு கார­ண­மாக காயங்­களும் உயி­ரி­ழப்­பும் ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ளது," என்று அவர் கூறி­னார்.

அதிக வெப்­ப­நி­லை­யால் மின்­தடை, தண்­ணீர் பற்­றாக்­குறை முன்­பை­விட அடிக்­கடி ஏற்­ப­டக்­கூ­டும் என்­பதை திரு­வாட்டி ஃபூ சுட்­டி­னார்.

"சமு­தாய, பொரு­ளி­யல் நட­வடிக்­கை­க­ளுக்கு இது பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். குளிர்­சா­தன, தண்­ணீர் சுத்­தி­க­ரிப்­புச் சாத­னங்­களின் பயன்­பாடு அதி­க­ரிப்­ப­தால் மின்­சா­ரத் தேவை­யை­யும் அதி­க­ரிக்கும்," என்று அவர் சொன்­னார்.