தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழக்கிறோம்'

2 mins read
4f1ce531-3dbc-447d-9903-c4ed0023a7b2
-

எதிர்­வ­ரும் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் நேற்று அறி­வித்­தார்.

இதனை முன்­னிட்டு அவர் மக்­கள் செயல் கட்­சி­யி­லி­ருந்து ஜூரோங் குழுத் தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லிருந்­தும் விலக இருக்­கி­றார்.

திரு தர்­மன் பல ஆண்­டு­களாக ஜூரோங் குழுத் தொகு­திக்­குத் தலை­மைத் தாங்­கி­னார். அவ­ரது நேரடி மேற்­பார்­வை­யின்­கீழ் இருந்த தாமான் ஜூரோங் தொகுதியை மிக­வும் சிறப்­பா­கப் பார்த்­துக்­கொண்­டார்.

திரு தர்­மன் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­கி­றார் என்று தெரி­ய­வந்­த­தும் மிகச் சிறந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரை இழக்­கப்­போ­கி­றோம் என்ற ஏக்­கம் ஜூரோங் குழுத் தொகுதி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இருப்­பது இதற்­குச் சான்று.

தாமான் ஜூரோங் தொகுதியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக திரு தர்­ம­னின் தன்­னி­க­ரற்ற செயல்­பாட்டை மெச்­சி­னார் தாமான் ஜூரோங் கடைத்­தொ­கு­தி­யில் கடந்த 14 ஆண்­டு­க­ளாக மளி­கைக்­கடை வைத்­தி­ருக்­கும் திரு சுந்­த­ர­ரா­ஜன் பழனி. ஏறத்­தாழ பத்து ஆண்­டு­களுக்கு முன்பு திரு தர்­மன் அந்த கடைத்­தொ­கு­திக்­குச் சென்­றி­ருந்­த­போது அவரை முதல்­மு­றை­யா­கச் சந்­தித்­தார் திரு சுந்­த­ர­ரா­ஜன், 48.

கடைத்­தொ­கு­தி­யில் உள்ள பொதுக் கழி­வ­றை­கள் மிக மோச­மான, பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் இருந்ததை திரு சுந்­த­ர­ரா­ஜ­னும் மற்ற கடைக்­கா­ரர்­களும் திரு தர்­ம­னி­டம் முறை­யிட்­ட­னர்.

அடுத்த ஒரு மாதத்­துக்­குள் கழி­வ­றை­க­ளைப் புதுப்­பிக்­கும் பணி­கள் தொடங்­கி­ய­தாக திரு சுந்­த­ர­ரா­ஜன் நினை­வு­கூர்ந்­தார்.

திரு தர்­மன் கனி­வா­ன­வர் என்­றும் உட­னடி நட­வ­டிக்கை எடுப்­ப­வர் என்­றும் அவர் கூறி­னார்.

"திரு தர்­மன் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றார். அவர் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் அது நாட்­டுக்கு நல்­லது. ஆனால் தாமான் ஜூரோங் தொகு­திக்கு அது இழப்­பா­கும்," என்­றார் திரு சுந்­த­ர­ரா­ஜன்.

திரு சுந்­த­ர­ரா­ஜ­னைப் போல ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசிய கிட்­டத்­தட்ட 50 குடி­யி­ருப்­பா­ளர்­கள் திரு தர்­மனை மிகச் சிறந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் என வர்­ணித்­த­னர்.

கேட்­கா­ம­லேயே தங்­க­ளுக்கு திரு தர்­மன் உதவி செய்­த­தாக ஏறத்­தாழ 40,000 குடி­யி­ருப்­பாளர்­க­ளைக் கொண்ட தாமான் ஜூரோங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"ஜூரோங் குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த இளை­யர்­க­ளுக்­குத் திரு தர்­மன் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாக இருந்து வந்­தார். குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் அவர் அடிக்­கடி தொடர்­பில் இருந்­தார். அவர் நாட்­டின் அதி­ப­ரா­ன­தும் துடிப்­பு­மிக்க குடி­மக்­க­ளாக இருக்க இளை­யர்­களைத் தொடர்ந்து ஊக்­க­விக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," என்று 25 ஆண்­டு­க­ளாக புக்­கிட் பாத்­தோக் ஈஸ்ட் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் 71 வயது திரு­வாட்டி தன­லட்­சுமி கூறி­னார்.