கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பின் இரவுநேர கேளிக்கை திரும்பிய கையுடன்
கொள்ளைநோய் காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடு
களால் இரவுநேர கேளிக்கை தடைபட்டது. அந்தக் கட்டுப்பாடுகள் நீங்கியவுடன், மதுப் பழக்கத்தால் ஏற்படும் சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன.
இதற்கு சான்றாக, 2022ஆம் ஆண்டில் மதுப் பழக்கத்தால்
ஏற்பட்ட சாலை விபத்துகள் 170 என்ற எண்ணிக்கையில் பதிவானது. இது கடந்த 2018ஆம் ஆண்டு பதிவான 178 என்ற எண்ணிக்கைக்குப் பின் ஆக அதிகமானது என்று போக்கு
வரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலைப் போக்குவரத்து சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, குடித்துவிட்டு சாலை விபத்துக்கு காரணமாவோர் கடுமையான தண்டனையை எதிர்நோக்குவர். குடிபோதையில் வாகனம் ஓட்டி முதல் முறையாக குற்றம் புரிவோருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். இது முன்னர் இருந்த தண்டனையுடன் ஒப்பிடுகையில், இரு மடங்கு அதிகம்.
இதுபற்றி கருத்துரைத்த நிதித் துறையில் பணிபுரியும் பிரயன் ஓங், மேலும் கடுமையான தண்டனைகள் குற்றச்செயல்களைத் தடுக்க உதவலாம்.
ஆனால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதில் விடாப்பிடியாக உள்ளவர்கள், அதிலிருந்து தப்பும் வழிகளைக் கண்டறிய முயற்சி செய்வர் என்கிறார் இவர்.
"சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலிருந்து தப்ப நினைப்பவர்கள் இப்பொழுதெல்லாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டனர்," என்று கூறு
கிறார்.
இவ்வாண்டு மே மாதம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகமாக காணப்பட்டன. இதில் மே 28ஆம் தேதி விபத்துக்குள்ளான வாகனம் ஒன்று விபத்து நடந்தபின் ஆடம் சாலையில் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தது. அந்த வாகன ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் கைதானார்.
இது நடந்த சில மணிநேரம் கழித்து இதேபோன்ற விபத்து தொடர்பாக மற்றொருவர் தெம்பனிஸ் அவென்யூ 10ல் கைது செய்யப்பட்டார்.
இதற்கு சில நாள்களுக்கு முன்னர், 27 வயது நிரம்பிய ஆடவர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
அவரது வாடகை வாகனம், பேஃபிரண்ட் அவென்யூ, மரினா பொலிவார்ட் சந்திப்பில் நிறுத்திவைக்கப்ட்ட வாகனம் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
சிங்கப்பூர் சட்டப்படி, 100மி. லிட்டர் ரத்தத்தில் 80மி. கிராம் அளவுக்கு மேல் மது இருக்கக்கூடாது.
ஒப்புநோக்க, மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 100மி. லிட்டர் ரத்தத்தில் 50மி. கிராம் மது அளவையே அனுமதிக்கின்றன.

