கொண்டாட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

கொண்டாட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
43f5103d-bb8c-42d5-beb0-76322ca5cbc2
-

ரச்­சனா வேலா­யு­தம்

வெளி­நாட்டு ஊழி­யர்­களை கொண்­டாடி அவர்­க­ளுக்கு தேவை­யான பல் மருத்­து­வம், பொருள் வாங்­கும் சலு­கை­கள் போன்ற நன்­மை­களை அறி முகப்­ப­டுத்த தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சும் (என்­டி­யுசி) வெளி­நாட்டு ஊழி­யர் அமைப்­பும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக என்­டி­யுசி மே தினக் கொண்­டாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தன.

கிட்­டத்­தட்ட 8,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்­சி­யில் என்­டி­யு­சி­யின் துணை தலை­மைச் செய­லா­ளர் ஹெங் சீ ஹாவ் சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை புரிந்­தி­ருந்­தார்.

"நம் நாட்­டின் முன்­னேற்­றத்­திற்கு பங்­காற்­றி­வ­ரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கொண்­டா­டும் வகை­யில் மே தின நாளுக்கு நாங்­கள் ஏற்­பாடு செய்­தோம். எல்­லாத் துறை­யி­லும் இருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களை என்­டி­யுசி தொடர்ந்து ஆத­ரித்து, அவர்­க­ளின் தேவை­களை பூர்த்தி செய்ய உத­வும்," என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­தின் நிதி­யு­தவி பிரி­வும் எஸ்­பி­எஃப் அற­நி­று­வ­னத்­தின் சிங்­கப்­பூர் வெளி­நாட்டு ஊழி­யர் நல­வாழ்­வும் இணைந்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்றை போட்­ட­னர். இந்த ஒப்­பந்­தம் திரு ஹெங் முன்­னி­லை­யில் கையெ­ழுத்து இடப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நலத்­தைப் பாது­காக்க அவர் களுக்கு காப்­பு­று­தியை வழங்­க­வும் பல் மருத்­து­வம் சம்­பந்­தப்­பட்ட சிகிச்­சை­கள், பரி­சோ­த­னை­களை சலு­கைக் கட்­ட­ணத்­தில் செய்­து­கொள்­ள­வும் இந்த ஒப்­பந்­தம் வகை செய்­கிறது.

புதிய சலு­கை­களை அங்கு அமைக்­கப்­பட்ட காட்­சிக் கூடத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அறிந்­து­கொண்­ட­னர்.

சூன் லீயில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­தின் பொழு­து­போக்கு மன்­றத்­தில் மே தினக் கொண்­டாட்­டம் நடை­பெற்­றது. சிறப்பு விருந்­தி­ன­ரான தற்­காப்பு மூத்த அமைச்­ச­ரு­மான ஹெங், வெளி­நாட்டு ஊழி­யர் களு­டன் உரை­யாடி விளை­யாட்டு களில் ஈடு­பட்­டார்.

பல் மருத்­து­வம் தொடர்­பான சிகிச்­சை­கள், பரி­சோ­த­னை­களை குறைந்த விலை­யில் பெற புதிய திட்­டம் உத­வும் என்று ஊழி­யர்­க­ளி­டம் திரு ஹெங் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகள் கொடுக்­கப்­பட்­டன.

கைப்­பந்து விளை­யாட்டு போட்­டி­யில் கலந்­து­கொண்டு வெற்றி பெற்ற ஊழி­யர்­க­ளுக்கு அவர் பரி­சு­களை வழங்­கி­னார். துவாஸ் தங்­கு­வி­டு­தி­யி­லும் மே தினம் கொண்­டா­டப்­பட்­டது.