மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மூன்று மாத குழந்தை உட்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் நான்கு கார்கள் ஒன்றையொன்று மோதிக் கொண்டன. காணொளி ஒன்றில் பிராடல் பாதை, ஆஸ்திரேலிய அனைத்துலகப் பள்ளிக்கு அருகே ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையின் இரண்டு தடங்களில் நான்கு கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. நிலப்போக்குவரத்து அதிகாரிகளுடன் இரண்டு இழுத்துச் செல்லும் வாகனங்களும் காணப்பட்டன. பிற்பகல் 12.20 மணியளவில் தகவல் கிடைத்து அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் மூன்று மாத குழந்தை உட்பட ஐவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நான்கு கார்கள் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐவர் காயம்
1 mins read
-

