ஜூன் 13 முதல் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்

ஜூன் 13 முதல் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்

1 mins read
96fc4d1e-c82d-4e6c-8d02-7e2558e8d8e7
பிரசார வாகனத்திலிருந்து வேட்பாளர்கள் நேரடியாகப் பேசுவதற்கும் நேரடி ஒலி, ஒளி, இசை ஆகியவற்றை ஒளிபரப்புவதற்கும் அனுமதியில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

பிரதமர் லீ சியன் லூங் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணையைப் பிறப்பிப்பார்.

அதற்குப் பிறகு ஐந்து நாள்கள் வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வேட்புமனுத் தாக்குதல் தினத்துக்கு முன்பு தேர்தலில் போட்டியிடத் தகுதிபெறுவோர் அறிவிக்கப்படுவர்.

தேர்தலுக்கான தகுதிச் சான்றிதழைப் பெற அதிபர் தேர்தல் குழுவிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

இனத் தகுதிநிலைச் சான்றளிப்புக் குழுவிடம், இனத் தகுதிநிலை உறுதியளிப்புக் கடிதத்தையும் சமர்ப்பிக்கவேண்டும்.

தற்போது அதிபர் பதவியை வகிக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப்பின் தவணைக் காலம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

அடுத்த அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

அதற்குப் பிறகு திங்கட்கிழமையன்று (12 ஜூன்) தொழிலதிபர் ஜார்ஜ் கோவும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.