மாண்டுகிடக்கக் காணப்பட்ட தேசிய சேவையாளர்

மாண்டுகிடக்கக் காணப்பட்ட தேசிய சேவையாளர்

1 mins read
94633450-c578-48f0-bbdc-93fc6849fcc9
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த தேசிய சேவையாளர் ஒருவர் திங்கட்கிழமை காலை சாங்கி கடற்படைத் தளத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

அவர் காலை 8.50 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆடவரின் மரணத்துக்கும் பயிற்சிக்கும் தொடர்பில்லை என அமைச்சு தெரிவித்தது.

இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அந்தச் சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.