'ஃபோர்ட் கேனிங் பார்க்'கில் உள்ள 'தி பேட்டல்பாக்ஸ்' அங்கத்துக்கு அனுமதி இலவசம்

'ஃபோர்ட் கேனிங் பார்க்'கில் உள்ள 'தி பேட்டல்பாக்ஸ்' அங்கத்துக்கு அனுமதி இலவசம்

1 mins read
df29892a-a493-44bf-9915-87fe1fd7f781
'ஃபோர்ட் கேனிங் பார்க்'கின் 'தி பேட்டல்பாக்ஸ் அங்கம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செந்தோசாவில் இருக்கும் 'ஃபோர்ட் கேனிங் பார்க்'கில் இருக்கும் 'தி பேட்டல்பாக்ஸ்' அங்குத்துக்குச் செல்ல இனி அனுமதி இலவசம்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதியன்று 'தி பேட்டல்பாக்ஸ்' மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

அன்றிலிருந்து அனுமதி இலவசம்.

'தி பேட்டல்பாக்ஸ்', இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினர் ஜப்பானியப் படைகளிடம் சரணமடைய முடிவெடுத்த இடமாகும்.

குளோபல் கல்ச்சுரல் அலையன்ஸ் அமைப்பின்கீழ் வந்த பிறகு இந்த அங்கம் 2023ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது.

அதற்கு முன்பு பெரியவர்களுக்குக் கட்டணம் 20 வெள்ளியாகவும் பிள்ளைகளுக்கான கட்டணம் 10 வெள்ளியாகவும் இருந்தது.