சுங்கை தெங்காவில் விபத்து; நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாதசாரி

சுங்கை தெங்காவில் விபத்து; நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாதசாரி

1 mins read
118ea00d-4d4e-4953-876d-b973709ff581
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ந்தது. படம்: ஷின் மின் நாளிதழ் -

சுங்கை தெங்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஒரு லாரி சம்பந்தப்பட்ட அந்த விபத்தில் 22 வயது பாதசாரி காயமுற்றார்.

அந்த ஆடவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சுங்கை தெங்காவை நோக்கிய ஓல்ட் சுவா சு காங் சாலையில் விபத்து நிகழ்ந்ததாக ஞாயிற்றுக்கிழமை 4.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் கூறினர்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.