தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குதிரை ஓட்டம் நிற்பதால் பூனைகள் நிலை கேள்விக்குறி

1 mins read
531ce31c-52a5-4c07-9e32-88cf28cac96a
-
multi-img1 of 2

கிராஞ்­சி­யில் அமைந்­துள்ள சிங்­கப்­பூர் பந்­த­யக் கழ­கத்­தில் 700க்கும் மேற்­பட்ட குதி­ரை­க­ளு­டன் 100க்கும் மேற்­பட்ட பூனை­களும் வசிக்­கின்­றன.

இந்­நி­லை­யில் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் குதி­ரைப் பந்­த­யத் திடல் மூடப்­படும் என்ற செய்­தியை அறிந்து அங்­குள்ள ஊழி­யர்­களும் பந்­த­யப் பயிற்­று­விப்­பா­ளர்­களும் நிச்­ச­ய­மற்ற சூழ­லில் சிக்­கி­யி­ருக்க இப்­பூ­னை­க­ளின் நிலை என்ன என்ற கேள்­வி­யும் எழுந்துள்ளது.

குதி­ரை­க­ளு­டன் வேலை­பார்க்­கும் பல­ரும் பூனை­க­ளைத் தின­மும் செல்­ல­மா­கக் கொஞ்­சு­வ­துண்டு. ஊழி­யர்­கள் தங்­க­ளின் நிலையை எண்­ணிக் கவ­லைப்­ப­டு­வ­தற்கு இடையே குதி­ரை­க­ளை­யும் பூனை­க­ளை­யும் பற்றி வேறு கவ­லைப்­பட வேண்­டி­யுள்­ளது என்­ற­னர் ஊழி­யர்­கள் சிலர்.

பூனை­க­ளின் எண்­ணிக்­கை­யும் கடந்த ஆண்­டு­களில் பன்­மடங்­கா­கி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் குதி­ரைப் பந்­த­யத் திடல் மூடப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து ஆறு பூனை­களை அங்கு வேலை பார்க்­கும் ஊழி­யர்­கள் தத்­தெ­டுத்­துக்­கொண்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.