அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்பு தேவை: ஹெங்

அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்பு தேவை: ஹெங்

2 mins read
d3f55deb-764d-4744-8163-bf7dae00afbe
-

அமெ­ரிக்கா, சீனா உள்­பட ஒவ்­வொரு நாட்­டின் நல­னை­யும் கருத்­தில்கொண்டு அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய மேம்­பாட்­டுக்கு வழி­வ­குக்­கும் ஒரு புதிய கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­ வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

நம்­பிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­கும் வளர்ச்­சிக்­குத் துணை­பு­ரி­வ­தற்­கும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் நாடு­கள் கூட்­டா­கச் செயல்­பட மூன்று அம்­சங்­கள் உள்­ளன.

மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெற்ற 'சைஸின் ஏஷிய நியூ விஷன்' கருத்­த­ரங்­கில் திரு ஹெங் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

முத­லில், வர்த்­தக வளர்ச்­சி­யை­யும் முத­லீட்­டை­யும் ஊக்­கு­விக்க ஆசி­யா­வும் மற்ற உலக நாடு­களும் வெளிப்­ப­டை­யான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, விதி­மு­றை­கள் அடிப்­ப­டை­யி­லான கட்­ட­மைப்பு ஒன்­றைத் தொடர்ந்து கட்­டிக்­காக்­க­ வேண்­டும்.

தடை­யற்ற வர்த்­த­க­மும் மேம்­பட்ட பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­பும் தொடர்ந்து நாடு­க­ளை­யும் மக்­க­ளை­யும் மேம்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்­கையே அதற்­குக் கார­ணம் என்று பொரு­ளி­யல் கொள்­கை­களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் கூறி­னார். சீனா, இந்­தியா, ஜப்­பான், தென் கொரியா, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து ஆகி­ய­வற்­று­டன் ஆசி­யான் கொண்­டுள்ள தடை­யற்ற வர்த்­தக உடன்­ப­டிக்­கை­கள் அனைத்­துத் தரப்­பு­க­ளுக்­கும் அனு­கூ­லங்­களை ஏற்­ப­டுத்தி, உற­வு­களை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இரண்­டா­வ­தாக, பொரு­ளி­யல் மேம்­பாட்­டை­யும் புத்­தாக்­கத்­தை­யும் விரை­வு­ப­டுத்த, உல­கம் முழு­வ­தும் மேலும் சுமூ­க­மான நிதி­வ­ளங்­களை ஊக்­கு­விக்­கு­மாறு திரு ஹெங் உலக நாடு­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

மூன்­றா­வ­தாக, பரு­வ­நிலை மாற்­றம், கொள்­ளை­நோய்­கள், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை, நாள்­பட்ட நோய்­க­ளால் ஏற்­படும் சுமை போன்ற பொது­வான சவால்­க­ளைச் சமா­ளிக்க நாடு­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­வேண்­டும்.

"வர்த்­த­கம் எப்­படி மில்­லி­யன்­க­ணக்­கா­னோ­ரைத் தொடர்ந்து மேம்­ப­டுத்தி வரு­கி­றதோ, நமது மக்­கள்­தொகை, உல­கம், மேம்­பட்ட வாழ்க்கை, வாழ்­வா­தா­ரம் ஆகி­ய­வற்­றுக்கு அறி­வி­ய­லும் தொழில்­நுட்­ப­முமே அடுத்த முக்­கி­யத் திற­வு­கோல்", என்­றார் திரு ஹெங்.

உல­கின் மிகப் பெரிய பொரு­ளியல்களான அமெ­ரிக்கா, சீனா ஆகி­ய­வற்­றின் தலை­மைத்­து­வம் அனை­வ­ருக்­கு­மான சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு முக்­கி­யம். அப்­போ­து­தான் பயனுள்ள முன்­னேற்­றங்­க­ளைக் காண­மு­டி­யும் என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.