பினாங்கு இரண்டாவது பாலத்தின் அவசரத் தடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்களின் வாகனங்களை ஓட்டிச்சென்ற கும்பலுக்கு மலேசிய காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். 'பிஎம்டபிள்யூ கார் கிளப்'பைச் சேர்ந்த ஓட்டுநர்கள், பாலத்தின் அவசரத் தடம் உள்பட மூன்று தடங்களிலும் தங்களின் வாகனத்தைச் செலுத்திய காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து ஓட்டுநர்களுக்கு மொத்தம் 16 விதிமீறல் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு சீட்டும் 300 ரிங்கிட் (S$87) அபராதத் தொகைக்குரியது. பத்து ஃபெரிங்கி பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் காவல் அதிகாரிகள் ஓட்டுநர்களை மறுநாள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் கும்பலில் சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் அடங்குவர்.
பினாங்கு பாலத்தை கடக்க முயன்ற கார் 'கிளப்'புக்கு அபராதம்
1 mins read
-

