தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மனித நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்கிருமி (எச்ஐவி) இருப்பதாக உறுதிசெய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டில் எச்ஐவி தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 202. இவர்களில் 187 பேர் ஆண்கள், எஞ்சிய 15 பேரும் மாதர்.
2021ல் மொத்தம் 250 பேருக்கு எச்ஐவி தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை 2012ஆம் ஆண்டில் ஆக அதிக எண்ணிக்கையான 469 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் 2022ல் உறுதிசெய்யப்பட்ட தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆரம்பகட்டத்தில் கண்டறியப்படவில்லை என்று அறியப்படுகிறது.
மருத்துவப் பராமரிப்பின்போதும் எச்ஐவி தொற்றுக் காலத்தின் பிந்தைய கட்டத்திலும் 53 விழுக்காட்டினரிடம் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டது.
மருத்துவப் பரிசோதனையைத் தாங்களே முன்வந்து செய்துகொண்ட 17 விழுக்காட்டினர், எச்ஐவி தொற்றுக்கு ஆளாகியிருப்பதை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தனர்.
எச்ஐவி சிகிச்சை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அரசாங்கம் கட்டணக் கழிவு வழங்கி வருகிறது.
பெரும்பாலான பொது மருத்துவ மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் தங்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக சந்தேகப்படுவோர் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.
1985ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 9,331 பேருக்கு எச்ஐவி இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் 2,362 பேர் மாண்டுவிட்டனர். 2022ல் மாண்டோர் எண்ணிக்கை 107.
அத்துடன் கடந்த ஆண்டு 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் அந்த 107 பேரில் அடங்குவர்.

