ஜோகூர் பாருவின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள மின்வாயில்களைப் பயன்படுத்த முடியாத அல்லது பதிவுசெய்ய முடியாத சிங்கப்பூரர்கள் அந்த மின்வாயில்களுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள முகப்பில் உதவி நாடலாம் என்று மலேசியாவின் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
"மின்வாயிலைப் பயன்படுத்துவதில் பிரச்சினையை எதிர்நோக்கும் வருகையாளர்களது விவரங்கள் குடிநுழைவு அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். மின்வாயிலை அடுத்த நபர் தொடர்ந்து பயன்படுத்தி நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
மின்வாயிலைப் பயன்படுத்த விரும்பும் சிங்கப்பூரர்கள், குறைந்தது மூன்று மாதங்களுக்குச் செல்லுபடியாகக்கூடிய கடப்பிதழை வைத்திருக்க வேண்டும்.
பயணத்திற்கு மூன்று நாள்கள் முன்னதாக மலேசிய மின்னிலக்க வருகை அட்டையையும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

