சிங்கப்பூரில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நோக்கில் கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிப் பேருந்துச் சேவை நிறுவனங்களுக்கு கூடுதலான எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி வழங்கப்படும். கல்வி அமைச்சு நேற்று அதனை அறிவித்தது.
அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் பேருந்துகள் மாணவர்களை ஏற்றிக்கொள்வதற்கும் இறக்கிவிடுவதற்கும் பொதுவான இடங்களை நிர்ணயிக்க அனுமதி வழங்கப்படும். ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குச் சேவை வழங்கவும் பெரிய பேருந்துகளைப் பயன்படுத்தி சேவை வழங்கவும் அது வகைசெய்யும்.
அம்முறையால் மாணவர்கள் பயணம் செய்யும் தொலைவு குறையும்.
தற்போது முதலில் பள்ளிப் பேருந்தில் ஏற்றிக்கொள்ளப்படும் மாணவர்கள் இனி சிறிது நேரம் கழித்து பேருந்தில் ஏறலாம்.
பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தை நீடித்த நிலைத்தன்மை மிக்கதாக வைத்திருக்க உதவும் வகையில் ஈராண்டு கழித்து கட்டண உயர்வுக்கு அனுமதிக்கப்படும்.

