வீவக: இடைக்கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

2 mins read
ff71f350-599c-4d5e-9dab-32b33ee36dd4
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக), புதிய வீடு­க­ளுக்­குக் காத்­தி­ருக்­கும் குடும்­பத்­தி­ன­ருக்­கான இடைக்கால வாடகை வீடு­க­ளின் எண்­ணிக்­கையை இரட்­டிப்­பாக்க இருக்­கிறது. அடுத்த ஈராண்­டு­களில் 4,000 தற்­கா­லிக வாடகை வீடு­கள் ஒதுக்­கப்­படும். தேசிய வளர்ச்­சிக்­கான மூத்த துணை­ய­மைச்­சர் சிம் ஆன் நேற்று இத்­த­க­வலை வெளி­யிட்­டார்.

'பிபி­எச்­எஸ்' எனப்­படும் பெற்­றோ­ருக்கு அருகே வீடு வாங்க விரும்­பு­வோ­ருக்­கான திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் வீடு­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் வகுக்­கப்­பட்ட இலக்கை வீவக எட்­டி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

2021ல் அத்­த­கைய 800 வீடு­கள் விற்­கப்­பட்­டன. இந்த ஆண்டு அந்த எண்­ணிக்கை 1,800க்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டு இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 2,000 வீடு­கள் அவ்­வாறு ஒதுக்­கப்­படும் என்­றார் திரு­வாட்டி சிம்.

பொது வீட­மைப்­புக்­கு அதி­க­ரிக்­கும் தேவையை ஈடு­கட்ட வீவக மேற்­கொள்­ளும் முயற்­சி­கள் பலன் தரத் தொடங்­கி­யுள்­ளன என்­றார் திரு­வாட்டி சிம்.

விற்­ப­னைக்கு விடும் வீடு­க­ளின் எண்­ணிக்­கையை உயர்த்­து­தல், தாம­தம் அடைந்த 'பிடிஓ' திட்­டங்­களை விரைந்து முடித்­தல் போன்­ற­வற்றை அவர் சுட்­டி­னார்.

அர­சாங்­கம் மறு­ப­ரி­சீ­லனை செய்­யும் மூன்று அம்­சங்­கள் குறித்து திரு­வாட்டி சிம் குறிப்­பிட்­டார்.

முதன்மை வட்­டார வீட­மைப்­புத் திட்­டம், சமூ­கப் பரா­ம­ரிப்பு அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள், குடி­யி­ருப்­புப் பேட்­டை­களை முதிர்ச்சி அடைந்­தவை, முதிர்ச்சி அடை­யா­தவை என்று பகுக்­கும் முறையை மறு­ஆய்வு செய்­தல் ஆகி­ய­வற்றை மூத்த துணை­ய­மைச்­சர் சுட்­டி­னார்.

அரசாங்கம் தற்போது பொது வீடமைப்பை கட்டுப்படியான விலையிலும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. மறுஆய்வு அரசாங்கத்தின் கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். விரைவில் அதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று திருவாட்டி சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.