மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 120,000க்கு மேற்பட்ட மின்சிகரெட்டுகளை குடிநுழைவு, சோதனைச் சாவடிஆணைய அதிகாரிகள் கைப்பற்றிஉள்ளனர்.
துவாஸ் சோதனைச் சாவடியில் இம்மாதம் 6ஆம் தேதி பிடிபட்ட மின்சிகரெட்டுகள் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.
சென்ற ஆண்டு ஏப்ரலில் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நிலவழி எல்லை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு பிடிபட்ட ஆக அதிக மின்சிகரெட்டுகள் அவை.