சுங்காய் தெங்கா வட்டாரத்தில் நேற்று முன்தினம் நடந்த லாரி விபத்தையடுத்து பாதசாரியான 22 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவர் சுயநினைவின்றி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சுங்காய் தெங்காவை நோக்கிச் செல்லும் ஓல்ட் சுவா சூ காங் ரோட்டில் நடந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் மாலை 4.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. இணையத்தில் காணப்படும் படங்களில் விபத்து நடந்த இடத்தில் 'எஸ்ஆர்எஸ் சிவில் இஞ்சினியரிங்' எனும் பெயர் எழுதப்பட்ட லாரியைக் காணமுடிகிறது.
தகவலறிய 'எஸ்ஆர்எஸ் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் இஞ்சினியரிங்' நிறுவனத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டுள்ளது. படம்: ஷின் மின் நாளேடு

