தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையரைத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட பதின்ம வயதுப் பெண்

2 mins read
97405f05-958f-4241-a1de-a23104e60b23
-

ஹோட்­டல் அறை ஒன்­றில் சிறப்­புத் தேவை­யு­டைய 19 வயது இளை­ய­ரைத் துன்­பு­றுத்­திய குழு­வில் இடம்­பெற்­றதை பதின்ம வய­துப் பெண் ஒரு­வர் நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

சென்ற ஆண்டு ஜன­வரி மாதம் 17ஆம் தேதிக்­கும் 25ஆம் தேதிக்­கும் இடை­யில் அவர்­கள் இளை­ய­ரைப் பல­வா­றா­கத் துன்­பு­றுத்­தி­னர்.

அப்­பெண் தண்­ணீ­ரைக் கொதிக்க வைத்­த­தா­க­வும் உடன் இருந்த முக­மது ஷஃபக்ரி முக­மது ஃபைஸால் என்­ப­வர் அதை இளை­ய­ரின் முது­கில் ஊற்­றி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட இளை­யர் மிக­வும் மோச­மான நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

அங்கு அவர் பத்து நாள்­கள் சிகிச்சை பெற்­றார்.

நேற்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட பெண்­ணுக்கு சென்ற வாரம் 18 வயது பூர்த்­தி­யா­னது. தாக்­கு­தல், போதைப்­பொ­ருள் உட்­கொண்­டது என இரண்டு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இளை­ய­ரைத் தாக்­கி­ய­போது அவ­ருக்கு வயது 16. போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­ய­போது 17 வயது.

எனவே சிறார், இளை­யர் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் அவ­ரது பெயரை வெளி­யிட அனு­மதி இல்லை.

22 வய­தா­கும் ஷஃபக்­ரிக்கு இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் ஐந்­தரை ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, தாக்­கு­தல், போதைப்­பொ­ருள் பயன்­பாடு ஆகி­யவை தொடர்­பில் சுமத்­தப்­பட்ட நான்கு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இளை­ய­ரைத் துன்­பு­றுத்­திய குழு­வைச் சேர்ந்த புத்ரி நுரா­மிரா அயிஷா ரோஸ்­லிக்கு சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் குறைந்­தது ஓராண்­டுக்­கான சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

குற்­றச்­செ­ய­லின்­போது 16 வயது நிரம்­பிய மற்­றொரு பெண்­ணுக்கு 2022 ஜூலை­யில் குறைந்­தது ஓராண்­டுக்­கான சீர்­தி­ருத்­தப் பயிற்சி விதிக்­கப்­பட்­டது.

ஹோட்­டல் அறை­யில் போதைப் பொருள் பயன்­ப­டுத்­திய நிலை­யில், இளை­யர் மீது வெந்­நீர் ஊற்­றி­யது மட்­டு­மன்றி அவரை எட்டி உதைத்­தும் குப்பை முறத்­தால் அடித்­தும் கன்­னத்­தில் அறைந்­தும் மூவர் தாக்­கி­னர்.

சமூக ஊட­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் படத்­தைப் பார்த்த அவ­ரது சகோ­தரி காவல்­து­றை­யில் புகா­ர­ளித்­த­தைத் தொடர்ந்து சென்ற ஆண்டு ஜன­வரி 26ஆம் தேதி அவர் மீட்­கப்­பட்­டார்.

நேற்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட பெண்­ணுக்கு ஜூலை 19ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.