புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையத்தில் தீ

புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையத்தில் தீ

1 mins read
a752fe15-f241-471b-9cc7-eb8b94a4a88b
-

செம்­ப­வாங் வட்­டார உண­வங்­காடி நிலை­யக் கடை ஒன்­றில் நேற்­றுக் காலை தீ மூண்­டது. அப்­போது அந்­தக் கடை­யில் யாரும் இல்லை எனக் கூறப்­பட்­டது.

புக்­கிட் கேன்­பரா உண­வங்­காடி நிலை­யத்­தின் முதல் தளத்­தில் அமைந்­துள்ள கடை­யின் சமை­ய­ல­றை­யில் அடுப்பு, புகை­போக்கி ஆகி­ய­வற்­றில் தீ பற்றி எரிந்­தது.

சம்­ப­வம் குறித்து நேற்­றுக் காலை 9.05 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­தைச் சென்­ற­டை­வ­தற்கு முன்­னரே, பொது­மக்­கள் தீய­ணைப்­பா­னைக் கொண்டு தீயை அணைத்­து­விட்­ட­தா­க­வும் தீச்­சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அது கூறி­யது.

'லொங் ஸியாங் ஹோ சியாக் சிஸர்ஸ் கட் கரி ரைஸ்' எனும் கடை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர் ஒரு­வர், தீ மூண்­ட­போது கழிப்­ப­றை­யில் இருந்­த­தா­கத் தெரி­கிறது. கடை எப்­போது மீண்­டும் திறக்­கப்­ப­டு­மெ­னத் தெரி­ய­வில்லை என்று அவர் கூறி­னார்.

நேற்­றுக் காலை பத்து மணி­ய­ள­வில், எரிந்­து­போன அக்­கடை காலி­யாக இருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட் டைம்ஸ் கூறி­யது.