சிங்கப்பூரில் பிள்ளைகளுக்கு நிதித்துறை தொடர்பான பாடங்களை விநியோகிக்கும் தானியக்க வங்கி இயந்திரங்கள் அறிமுகம் கண்டுள்ளன.
பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே நிதி நிர்வாகத்தைக் கற்றுத் தருவது நோக்கம்.
உள்ளூர் வங்கியான 'பிஓஎஸ்பி', 'ஐயா!' கற்றல் தளத்துடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தத் தானியக்க இயந்திரங்கள் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் உள்ள நூலகங்களிலும் பள்ளிகளிலும் அமைந்திருக்கும்.
அவற்றில் உயிரோவிய முறையிலான நிதி நிர்வாகப் பாடங்களைப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம்வரை அந்தத் தானியக்க இயந்திரங்கள் சேவை வழங்கும்.
இவ்வாண்டு இறுதிக்குள் 400,000 ஆசிரியர்கள், பெற்றோர், பிள்ளைகளைச் சென்றடைவது திட்டத்தின் இலக்கு.
குறைந்த வருமானக் குடும்பத்துப் பிள்ளைகள் பணத்தை அறிவார்ந்த முறையில் செலவிடுவது குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள அத்திட்டம் கைகொடுக்கும்.
இணையத்தளத்திற்கு அப்பால் பிள்ளைகள் நேரடியாக நிதி சார்ந்த அம்சங்களைக் கற்றுக்கொள்ள ஓர் இடத்தை அமைக்க விரும்பியதாக 'பிஓஎஸ்பி' வங்கி கூறியது.

