தானியங்கி விநியோக இயந்திரம்வழி மருந்து

தானியங்கி விநியோக இயந்திரம்வழி மருந்து

1 mins read
d0b04027-46bb-4c89-ab9c-4fbb59f1c779
-

மருந்­த­கங்­க­ளின் செயல்­திறனை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் மருந்­த­கங்­களில் கிடைக்­கக்­கூ­டிய மருந்­து­களை இனி நோயா­ளி­கள் தானி­யங்கி விநி­யோக இயந்­தி­ரம்­வழி வாங்­கிக்­கொள்­ள­லாம்.

சாங்கி பொது மருத்­து­வ­மனை­யின் 'ஃபார்ம­சிஸ்' முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் தொலைத்­தொ­டர்பு ஆலோ­ச­னைக்­குப் பின் நோயா­ளி­கள் இவ்­வாறு மருந்­து­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

கடுமை அல்­லாத நோய்­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர் தங்­க­ளின் மருந்­து­க­ளைப் பெற்­றுக்­கொள்­வது மேலும் எளி­தா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

'ஃபார்ம­சிஸ்' திட்­டத்­தின் மூலம் மே மாதத்­தில் 100க்கும் மேற்­பட்ட நோயா­ளி­கள் பல­ன­டைந்­துள்­ள­னர்.

நோயாளிகள் தங்­க­ளின் பெய­ரை­யும் தொடர்பு எண்­ணை­யும் இயந்­தி­ரத்­தில் பதி­விட்­டதை அடுத்து மருந்­த­கர் நோயாளிகளு­டன் தொடர்­பு­கொண்டு மருந்­து­கள் கிடைப்­ப­தற்கு வகை­செய்­வார். விரை­வில் இத்­திட்­டம் சிமெய், சாங்கி வட்­டா­ரங்­களில் வலம்வரும்.