கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட மாணவர்

கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட மாணவர்

2 mins read
8704ac7c-7e10-456e-a2ef-3db54882f96b
-

சிங்­கப்­பூர் கலைக் கல்­லூரி ஒன்­றில் படித்து வரும் சீன­நாட்டு மாண­வர் ஒரு­வர், கம்­போ­டி­யா­வில் கடத்­தல்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளார். அர­சாங்க அதி­காரி போல் பாசாங்கு செய்­யும் மோச­டிக்கு ஆளான அந்த மாண­வர் பாது­காப்­பாக இருப்­ப­தாக சிங்­கப்­பூ­ரின் சீனத் தூத­ர­கம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் உட்­பட பல­நாட்­டுச் சட்ட அம­லாக்க அமைப்­பு­கள் இணைந்து மேற்­கொண்ட நட­வடிக்­கை­யில் மாண­வரை மீட்க முடிந்­த­தா­க­வும் தூத­ர­கம் குறிப்­பிட்­டது.

மாண­வ­ரின் பெற்­றோர் பணம் ஏதும் இழக்­க­வில்லை என்­றும் கூறப்­பட்­டது.

கடந்த 2ஆம் தேதி­யன்று மோச­டிக்­கா­ரர்­கள் மாண­வ­ரு­டன் தொடர்­பு­கொண்டு அந்த மாண­வர் அதி­கா­ரி­க­ளால் தேடப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னர்.

அத­னால் கம்­போ­டி­யா­வின் கரை­யோர நக­ரான சிய­னக்­வில்­லுக்கு விமா­னத்­தில் சென்று தலை­ம­றை­வாக இருக்­கு­மாறு மோச­டிப் பேர்­வ­ழி­கள் அந்த மாண­வ­ரி­டம் கூறி­னர்.

ஆனால் அவ்­வி­டத்தை அந்த மாண­வர் அடைந்­த­தும் மோச­டிக் கும்­பல் அவ­ரைப் பிடித்து வைத்­துக்­கொண்­ட­து­டன் அவ­ரின் பெற்­றோ­ருக்­காக காணொளி ஒன்­றை­யும் பதிவு செய்­த­னர்.

அந்­தக் காணொ­ளியை மாண­வ­ரின் பெற்­றோ­ருக்கு அனுப்பி 3 மில்­லி­யன் யுவான் (S$562,000) தந்­தால் விடு­விப்­ப­தா­கக் கூறி மிரட்­டி­னர்.

அதை­ய­டுத்து ஜூன் 4ஆம் தேதி­யன்று மாண­வ­ரின் பெற்­றோர் காவல் துறை­யி­டம் புகார் அளித்­த­னர். சிங்­கப்­பூ­ரின் சீனத் தூத­ர­கம் அதை­ய­டுத்து கம்­போ­டி­யா­வின் சீனத் தூத­ர­கத்­து­டன் தொடர்­பு­கொண்டு உள்­ளூர் காவல்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து மீட்­புப் பணி­யில் இறங்­கத் திட்­ட­மிட்­ட­னர்.

மறு­நா­ளான ஜூன் 5ஆம் தேதி­யன்று கம்­போ­டிய காவல்­துறை அதி­கா­ரி­கள் மாண­வ­ரைக் கண்­டு­பி­டித்து மீட்­ட­னர்.

இதற்­கி­டையே மோச­டி­கள் தொடர்­பில் எச்­ச­ரிக்கை காக்­கு­மாறு இங்கு படிக்­கும் சீன­நாட்டு மாண­வர்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரின் சீனத் தூத­ர­கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் அதி­கா­ரி­கள் எவ்­வே­ளை­யி­லும் தொலை­பே­சி­வழி தனி­ந­பர் தக­வல்­க­ளைக் கேட்­க­மாட்­டார்­கள் என்­றும் அறி­மு­க­மில்­லாத தொடர்பு எண்­ணி­லி­ருந்து அழைப்பு வரும்­போது ஒரு­வர் தனது பெயர், முக­வரி, குடும்­பச் சூழல், வங்கி விவ­ரங்­கள் போன்ற தக­வல்­க­ளைக் கூறக்­கூ­டாது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் சட்­டத்­திற்­குப் புறம்­பா­கச் செயல்­படும் ஆள்­க­டத்­தல் கும்­பல்­க­ளி­டம் பத்­தா­யி­ரக்­க­ணக்­கா­னோர் சிக்­கு­கின்­ற­னர் என்ற 'இன்­டர்­போல்' விடுத்­துள்ள எச்­ச­ரிக்­கைக்கு அடுத்து இச்­சம்­ப­வம் நடந்­துள்­ளது.

முத­லீட்டு மோசடி, காதல் மோசடி, இணை­யச் சூதாட்­டம் போன்ற வெவ்­வேறு மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பல­ரும் சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­படும் நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும் உயர் தகு­தி­யு­டை­ய­வர்­கள், பல்­க­லைக்­க­ழ­கப் பட்­டங்­கள் வைத்­தி­ருப்­ப­வர்­கள், தக­வல் தொழில்­நுட்­பத்­தில் கைதேர்ந்­த­வர்­கள் போன்­றோரை இந்த மோச­டிக் கும்­பல்­கள் குறி­வைக்­கப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மோசடி மையங்­கள் கம்­போ­டி­யா­வில் அதி­கம் இயங்கி வரு­வ­தா­க­வும் லாவோஸ், மியன்­மார் ஆகிய நாடு­க­ளி­லும் சில மையங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு அர­சாங்க அதி­காரி போல் பாசாங்கு செய்­யும் மோச­டிச் சம்­ப­வங்­கள் 771.