பாவாடைக்குள் காணொளி எடுத்த குற்றத்திற்காக ஆசிரியருக்குச் சிறை

பாவாடைக்குள் காணொளி எடுத்த குற்றத்திற்காக ஆசிரியருக்குச் சிறை

1 mins read
bd52896b-0836-48ec-93ff-e0c3edde10a9
-

முன்­னாள் பள்­ளிக் கட்­டொ­ழுங்கு ஆசி­ரி­யர் தம்­மு­டைய மாண­வர்­கள், உடன் பணி­யாற்­றி­வர்­கள் உட்­பட மொத்­தம் 170 பேரின் பாவா­டைக்­குள் காணொளி எடுத்த குற்­றத்­திற்­காக நேற்று அவ­ருக்கு 10 மாதங்­கள், இரண்டு வாரங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குறைந்­தது 47 பேரை அந்த 50 வயது ஆட­வர் குறி­வைத்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான அந்த ஆட­வர், 2015ஆம் ஆண்­டுக்­கும் 2018ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் குற்­றம் புரிந்­துள்­ளார். பாதிக்­கப்­பட்­டோ­ரின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் நோக்­கில் குற்­றம் புரிந்த ஆட­வ­ரின் பெய­ரும் அவர் பணி­யாற்­றிய பள்­ளி­யின் பெய­ரும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

குற்­றம் புரிந்த கால­கட்­டத்­தில் ஆட­வர் கடு­மை­யான மன­அ­ழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் என்ற மன­ந­லக் கழக அறிக்­கை­யைத் தாம் கருத்­தில்­கொண்­ட­தாக மாவட்ட நீதி­பதி பிரென்டா டான் தண்­டனை விதிப்­புக்கு முன் தெரி­வித்­தார்.

தண்­ட­னைக் காலத்­தின்­போது கட்­டாய சிகிச்சை ஆணையை நிறை­வேற்ற ஆட­வர் தகு­தி­யுடை­ய­வர் என்று கண்­ட­றி­யப்­பட்­ட­போதும் குற்­றம் புரி­வ­தைத் தவிர்க்­கும் ஆற்­ற­லும் ஆட­வருக்கு இருந்­த­தாக அறிக்கை கூறி­யது. இத­னால் ஆட­வ­ருக்கு நீதி­பதி சிறைத் தண்­டனை விதித்­தார். இதை­ய­டுத்து சிறைத்­தண்­ட­னைக்கு எதி­ராக ஆட­வர் மேல்­மு­றை­யீடு செய்­ய­வி­ருப்­ப­தாக அவ­ரின் வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். ஆட­வரை $15,000 பிணை­யில் விடு­விக்க நீதி­பதி ஆணை­யிட்­டார்.

ஆட­வ­ரு­டன் பணி­யாற்­றிய பெண் ஆசி­ரி­யர் ஒரு­வர், அவர் பாவா­டைக்­குள் காணொ­ளி­கள் எடுத்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கித்து காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­ததை அடுத்து ஆட­வ­ரின் குற்­றங்­கள் அம்­ப­ல­மாகின.