'மெர்லயன்': புதியவகை ஆர்க்கிட் மலர் கண்டுபிடிப்பு

1 mins read
9125cba1-b4c5-4285-a8b4-acefe0bc9217
-
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரில் புதி­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள ஆர்க்­கிட் மல­ருக்கு 'மெர்­ல­யன்' எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

'கிளே­டி­ரியா லியொன்­தொ­கெம்­பஸ்' வகை­யைச் சேர்ந்த பூவின் மாதிரி ஒன்றை, சிங்­கப்­பூர் பூமலை ஆய்­வா­ளர்­கள் 2020ல் கண்­டு­பி­டித்­த­தாக தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்­தது.

"அந்­தச் செடி­யில் பின்­னர் கீழ்­நோக்­கிய சிறிய மஞ்­சள் நிறப் பூக்­கள் பூத்­துக் குலுங்­கின. 'கிளே­டி­ரியா விரி­டி­ஃபு­ளோரா' வகை­யின் நிமிர்ந்­தி­ருக்­கும் அடர் பச்சை நிறப் பூவி­லி­ருந்து அவை மாறு­பட்­டி­ருந்­தன", என்று கழ­கம் கூறி­யது.

'லியொன்­தொ­கெம்­பஸ்' என்ற சொல்­லுக்கு கிரேக்க மொழி­யில் மெர்­ல­யன் என்று பொருள்.

புதிய ஆர்க்­கிட் மலர் 'கிளே­டி­ரியா' பிரிவைச் சேர்ந்த மூன்றாவது ஆர்க்கிட் வகை, அதனை இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்­ரா­வி­லும் மலே­சிய தீப­கற்­பத்­தி­லும் காண­லாம் என்று கழ­கம் கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து புதிய கண்­டு­பி­டிப்­பு­கள் செய்­யப்­ப­டு­வ­தை­யும் ஆர்க்­கிட் மலர்­க­ளைப் போன்று பர­வ­லாக ஆய்வு நடத்­தப்­படும் செடி வகை­க­ளி­லும்­கூட அதைக் காண­முடி­வ­தும் மகிழ்ச்சி தரு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார்.

"இத்­த­கைய முயற்­சி­கள் சிங்­கப்­பூ­ரின் செழிப்­பான பல்­லு­யிர் பன்­மு­கத்­தன்­மை­யைக் கட்டிக்காக்கும் உத்­தி­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன", என்­றார் திரு லீ.