எண்ணெய்க் கப்பலில் தீ; யாருக்கும் காயமில்லை

எண்ணெய்க் கப்பலில் தீ; யாருக்கும் காயமில்லை

1 mins read
55967a57-7d26-4cbe-bbf6-a0c755c00833
-

ஜூரோங் துறை­முக எண்­ணெய்க் கப்­பல் முனை­யத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த எண்­ணெய்க் கப்­பல் ஒன்­றில் நேற்­றுக் காலை தீ மூண்­டது. சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை.

நேற்­றுக் காலை 7.30 மணிக்கு தீச்­சம்­ப­வம் குறித்­துத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் கூறி­யது. இந்­தோ­னீ­சி­யா­வில் பதி­வான 'ரோசா டினி' எண்­ணெய்க் கப்­ப­லின் முன்­பகு­தி­யில் புகை தென்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

தீயை அணைக்க, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­க­ளோடு ஆணை­யத்­தின் சுற்­றுக்­கா­வல் பட­கும் முனை­யத்­தின் நெருக்­கடி நேர நட­வ­டிக்­கைப் பிரி­வும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

இரண்டு மணி நேரத்­தில் தீ அணைக்­கப்­பட்­டது. அக்­கப்­ப­லில் இருந்­தோர் பாது­காப்­பாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முனை­யத்­தில் உள்ள எண்­ணெய்க் கப்­பல்­க­ளுக்கோ அணை­க­ரை­க­ளுக்கோ எவ்­வி­தச் சேத­மும் ஏற்­ப­ட­வில்லை. அம்­மு­னை­யம் சுத்­த­மான பெட்­ரோ­லி­யப் பொருள்­க­ளை­யும் ரசா­ய­னங்­க­ளை­யும் சேமித்து, கையாள்­கிறது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக, அரு­கில் உள்ள அணை­க­ரை­க­ளின் செயல்­பா­டு­கள் நிறுத்­தப்­பட்­டன. மற்­றொரு கப்­பல் நங்­கூ­ர­மி­டும் பகு­திக்கு இடம் மாற்­றப்­பட்­டது.

தீச்­சம்­ப­வத்­தால் துறை­மு­கச் செயல்­பா­டு­களோ கப்­பல் போக்­கு­வ­ரத்தோ பாதிக்­கப்­ப­ட­வில்லை.