சாதனை அளவில் அதிகரித்த 'எஸ்ஐஏ' பங்கு விலை

சாதனை அளவில் அதிகரித்த 'எஸ்ஐஏ' பங்கு விலை

1 mins read
425d3784-b001-4308-a482-575696904efa
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னத்­தின் பங்­கு­க­ளின் விலை தொடர்ந்து ஏறு­மு­க­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

கடந்த மூன்று மாதங்­களில் அதன் பங்­கு­க­ளின் விலை 32 விழுக்­காடு உயர்ந்­தது.

அதன்­மூ­லம் நிறு­வ­னம் ஈட்­டிய லாபம் மற்ற விமான நிறு­வ­னங்­க­ளின் லாபத்­தை­விட மிக அதி­கம்.

வலு­வான தேவை கார­ண­மாக பங்கு விலை அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு, விமா­னப் பய­ணங்­கள் மீண்­டும் சூடு­பி­டிக்­கத் தொடங்­கிய நிலை­யில், எஸ்­ஐஏ ஆக அதிக வரு­டாந்­தர நிகர வரு­மா­னத்­தைப் பதி­வு­செய்­தது. அத­னை­ய­டுத்து ஐந்­தாண்­டு­களில் ஆக அதிக அள­வில் பங்­கு­கள் வர்த்­த­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

புளூம்­பெர்க் உலக விமான நிறு­வ­னங்­க­ளின் பட்­டி­ய­லில், மார்ச் 13ஆம் தேதிக்­குப் பிற­கான கால­கட்­டத்­திற்கு முதல் இடத்­தைப் பிடித்­துள்­ளது எஸ்­ஐஏ பங்­கு­க­ளின் விலை.

அதன் பங்­கு­கள் நேற்று முன்­தி­னம் இரண்டு விழுக்­காட்­டுக்­கும் மேல் விலை உயர்ந்­தன.

பங்­கு­க­ளின் விலை மேலும் ஆக்­க­பூர்­வ­மான நிலையை எட்­டக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை இன்­னும் கிரு­மிப் பர­வலுக்கு முந்­தைய நிலையை எட்­ட­வில்லை. இவ்வேளையில், விமா­னங்­களில் இல­வச இணை­யச் சேவை போன்ற நட­வ­டிக்­கை­கள் எஸ்­ஐஏ அதன் சந்­தை­யைத் தக்க­வைத்­துக்­கொள்ள உத­வும் எனக் கருதப்படுகிறது.