$589 மில்லியன் செலவில் 44 ரயில்கள்

2 mins read
ee465e6b-7ccf-4a18-a299-8312c94a8ba4
-

குறுக்குத் தீவு ரயில் தடம்

சிங்­கப்­பூ­ரின் குறுக்­குத் தீவு ரயில் தடத்­துக்­காக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் ஆறு ரயில் பெட்­டி­க­ளைக் கொண்ட 44 ரயில்­களை வாங்­கி­யுள்­ளது. அந்­தத் தடத்­தின் முதல் கட்ட சேவை 2030ஆம் ஆண்டு தொடங்­கும் முன்­னர் 2027ஆம் ஆண்டு ரயில்கள் தரு­விக்­கப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்து­ள்­ளது.

இது தொடர்­பான $589 மில்­லி­யன் ஒப்­பந்­தத்தை ஆணை­யம் சிஃபாங் ரயில்வே வெஹிக்­கல் சர்­விஸ், சிங்­கப்­பூர் சிஆர்­ஆர்சி ரயில்வே வெஹிக்­கல்ஸ் சர்­விஸ் குழு­மத்­துக்கு வழங்­கி­யுள்­ள­தாக ஆணை­யம் நேற்று கூறி­யது.

இந்த ஒப்­பந்­தத்­தில் ஆணை­யம் மேலும் 11 ரயில்­கள் வாங்­க­வும் வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், ரயில் நிறு­வ­னக் குழு­மம் நீண்­ட­கால பரா­ம­ரிப்பு சேவை வழங்­க­வும் ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

இந்த முழு தானி­யக்க முறை­யி­லான புது­வகை சிஆர்­எல் ரயில்­கள் சீனா­வின் கிங்­டாவ் நக­ரில் தயா­ரிக்­கப்­படும் என்­றும் ஆணை­யம் விளக்­கி­யுள்­ளது.

ஒவ்­வொரு ரயி­லி­லும் பய­ணி­கள் விரை­வாக நுழைய, வெளி­யேற வச­தி­யாக தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்­தில் சேவை­யில் உள்ள ரயில்­க­ளைப் போல் இரு­பக்­கங்­க­ளி­லும் தலா ஐந்து கத­வு­கள் இருக்­கும்.

மற்ற ரயில் தடங்­க­ளில் உள்ள ரயில்­களில் இரு பக்­கங்­க­ளி­லும் தலா நான்கு கத­வு­கள் மட்­டுமே உள்­ளன.

மேலும், ரயில் பெட்­டி­க­ளுக்கு இடை­யே­யான இணைப்­புப் பாதை 1.6 மீட்­டர் அக­லத்­தில் இருக்­கும். இது தற்­போது மற்ற ரயில் பெட்­டி­க­ளுக்கு இடையே இருக்­கும் 1.4 மீட்­டர் அள­வி­லான இணைப்­பு­களை விட அதிக அக­லம் கொண்­டது. இத­னால், பய­ணி­கள் ரயில் பெட்­டி­க­ளுக்கு இடையே செல்­வது எளி­தாக இருக்­கும்.

மேலும், புதி­தாக வர­வி­ருக்­கும் ரயில்­கள் சிக்­க­ன­மான எரி­சக்­திப் பயன்­பாட்­டு­டன் செயல்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. இந்­தப் புதிய சிஆர்­எல் ரயில்­களில் இயந்­தி­ர கோளாறை கால­தா­ம­த­மின்­றி கண்­ட­றி­யும் முறை­யும் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.