அனைத்துலக உந்துகணை போட்டி: சிங்கப்பூர் மாணவர்களுக்கு 3வது இடம்

அனைத்துலக உந்துகணை போட்டி: சிங்கப்பூர் மாணவர்களுக்கு 3வது இடம்

2 mins read
2d9478cb-28f2-4da0-aafc-8d0d5f2601e4
-

சிங்­கப்­பூர் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் குழு ஒன்று பல சோத­னை­க­ளைக் கடந்து அனைத்­து­லக உந்­து­க­ணை தயா­ரிக்­கும் 'பிரெ​ண்​ட்ஸ் ஆஃப் அமெட்​சுவர் ராகெட்ரி' போட்­டி­யில் மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

எட்டுப் பேர் கொண்ட அந்த​க் குழு­வில் சிங்­கப்பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்கலைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­க மாண­வர்­கள் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

கலி­ஃபோர்­னி­யா­வின் மொஜாவே பாலை­வ­னத்­தில் போட்டி நடந்­தது.

உந்­து­க­ணை தயா­ரிக்­கத் தேவை­யான பாகங்­களில் மூன்­றில் ஒரு பங்​கை தங்­கள் பய­ணப்­பெட்­டி­களில் மாண­வர்­கள் எடுத்துச் சென்­ற­னர். மற்ற பாகங்­களை சரக்கு விமா­னத்­தில் அனுப்­பி­னர்.

மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான இயந்­தி­ரம் உள்­ளிட்ட உந்து­க­ணை­யின் முக்­கிய பாகங்­களை அமெ­ரிக்க சுங்க அதி­கா­ரி­கள் நாட்­டிற்­குள் அனு­ம­திக்­க­வில்லை. இத­னால் மாண­வர்­கள் போட்­டி­யில் கலந்­து­கொள்­வ­தில் சிக்­கல் ​ஏற்­பட்­டது.

இருப்­பி­னும் மனம் தள­ராத சிங்­கப்­பூர் மாண­வர்­கள் போட்டி ஏற்­பாட்­டா­ளர்­கள், போட்­டி­யில் கலந்­து­கொள்ள வந்த மற்ற குழுக்­கள் ஆகி­யோ­ரி­டம் இருந்து உந்­து­க­ணைப் பாகங்­களை இர­வல் பெற்­ற­னர்.

பாலை­வ­னத்­தில் நடந்த இந்­தப் போட்­டி­யில் கடு­மை­யான வானி­லை­யை­யும் சூழ­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் ஜூன் 2, 3 ஆம் தேதி­களில் நீண்ட நேரம் உழைத்து ஜூன் 4ஆம் தேதி 3 மீட்­டர் உந்­து­க­ணையை உரு­வாக்கி வெற்­றி­பெற்­ற­னர்.

வெற்­றி­பெற்ற மாண­வர்­கள் லாப​​ நோக்­க­மற்ற தொண்­டூ­ழிய குழு­வான 'செட்ஸ்' எனும் மாண­வர்க­ளுக்­கான விண்­வெளி ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு குழு­வைச் சேர்ந்­த­வர்­கள்.

'​புரோ­ஜெக்ட் மைனா' என்­ற­ழைக்­கப்­படும் மாண­வர்­க­ளின் உந்­து­கணை கிட்­டத்­தட்ட 3.2 கிலோ­மீட்­டர் உய­ரம் பறந்­தது.

" இரண்டு ஆண்டு உழைப்பு, பயண செலவு இதில் உள்­ளது. அத­னால் போட்­டி­யில் இருந்து வில­கு­வ­தில் எங்­கள் அணிக்கு எண்­ணம் இல்லை, இவ்­வ­ளவு சிர­மங்­க­ளை­யும் தாண்டி வெற்றி­பெற்­றது மகிழ்ச்சி​யளிக்­கிற​து" என்று​ குழு­வின்​ தலை­வர் துருவ் மிட்­டல் (25) தெரி­வித்­தார்.