சிங்கப்பூர் ரோடு விஜிலண்ட்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 12ஆம் தேதி பகிரப்பட்ட காணொளியில், வோக்ஸ்வேகன் காரின் ஓட்டுநர் மற்றொரு காரின் கதவை பலவந்தமாக திறக்க முற்படுவதைப் பார்க்க முடிந்தது.
அவர் அந்த கார் தன்னுடைய வழித்தடத்தில் வருவது பிடிக்காமல் அதைத் தடுக்க மூர்க்கத்தனமாக இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதே வாகன எண் கொண்ட வோக்ஸ்வேகன் கார் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீவு விரைவுச் சாலையில் காவல்துறை வாகனத்தை முந்திச் செல்வதற்காக வேகமாக வளைந்தது. அந்த காரின் மீது மோதாமல் இருக்க காவல்துறை வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த உதவும் கருவியை வேகமாக அழுத்தினார்.
இதனால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

