தனிமை உத்தரவை மீறி அபராதம் கட்டியதாக பொய் கூறினார்: ஆடவருக்கு சிறை

2 mins read
2847f472-6286-4bde-9717-825291a49eba
-

கொவிட்-19 தனி­மைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறிய ஆட­வர் ஒருவர் அதற்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்­தை­யும் செலுத்­தா­மல் சுகா­தார அமைச்சை ஏமாற்­றி­யுள்­ளார்.

இந்­தக் குற்­றத்­திற்­காக 29 வய­தான லோவல் கால்­வின் சிம் யூ ஜுன்னுக்கு 7 மாத சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கொவிட்-19 தனி­மைப்­ப­டுத்­திக்கொள்­ளும் ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

அவர் தஞ்­சோங் பகார் வட்­டா­ரத்­தி­லுள்ள அமரா சிங்­கப்­பூர் ஹோட்டல் அறை­யில் ஆகஸ்ட் 13 வரை தனி­மை­யில் இருக்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆனால் அவர் அந்த ஆணைக்கு உட்­ப­டா­மல், ஆகஸ்ட் 5ஆம் தேதி அந்த ஹோட்­ட­லின் வேறு அறைக்கு கைப்பேசி மின்­னேற்றி வாங்க சென்­றுள்­ளார். அந்த அறை­யில் இருந்­த­வ­ரும் தனி­மை உத்தரவில் இருந்துள்ளார்.

சிம் அவ­ரு­டைய அறையை விட்டு வெளி­யேறி வேறு ஓர் அறை­யில் இருப்­பதை அறிந்த ஹோட்­ட­லின் விருந்­தி­னர் சேவை மேலா­ளர் சுகா­தார அமைச்­சுக்கு தக­வல் தெரி­வித்­தார்.

இதன் தொர்பில் அந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 11ஆம் தேதி சுகா­தார அமைச்­சில் இருந்து சிம்முக்கு அவர் புரிந்த குற்­றத்­திற்­காக $500 அப­ரா­தம் விதித்­தி­ருப்­ப­தாக ஆணை வந்­தது.

அவர் 2022ஆம் ஆண்டு பிப்­ர­வரி 9ஆம் தேதி அந்த

அப­ராதத்தை தான் செலுத்தி விட்­ட­தாகக் கூறி, போலி ஆவ­ணம் ஒன்றை மின்­னஞ்­ச­லில் சுகா­தார அமைச்­சுக்கு அனுப்­பி­னார்.

இது குறித்து 5 மாதத்­திற்குப் பிறகு காவல்­து­றைக்கு புகார் அளிக்­கப்­பட்­டது.

அவர் போதை மருந்து பழக்­கம் உடை­ய­வர். 2021ஆம் ஆண்­டுக்­கும் 2026ஆம் ஆண்­டுக்­கும் இடையே அவர் காவல்­து­றை­யின் கட்­டாய கண்­கா­ணிப்பு சிம் ஆணையின்கீழ் இருந்­தார்.

அப்­போது அவர் அங் மோ கியோ காவல்­துறை தலை­மை­ய­கம் சென்று ஒவ்­வொரு திங்­கள்­கி­ழ­மை­யும் சிறு­நீர் பரி­சோ­தனை செய்துகொள்ள வேண்­டும்.

அவர் அதை செய்யத் தவறி­ய­தால் அவ­ரைக் காவல்துறை அவ்­வாண்டு நவம்­பர் மாதம் கைது செய்­தது.

சிம் $20,000 பிணைத்­தொகை செலுத்தி தற்­போது வெளி­வந்­துள்­ளார்.

ஜூன் மாதம் 30ஆம் தேதி சிம் யூ ஜுன் சிறை தண்டனையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.