பாலர்பள்ளி கதவுமீது வாகனம் மோதியது; ஐந்து வயது சிறுவன் மருத்துவமனையில்

பாலர்பள்ளி கதவுமீது வாகனம் மோதியது; ஐந்து வயது சிறுவன் மருத்துவமனையில்

1 mins read
ac731c64-fa6d-401d-8df9-7a616c04b857
62 வயது வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார். படம்: ஷின் மின் நாளிதழ் -

பிஷானில் உள்ள பாலர்பள்ளி ஒன்றின் கதவுமீது வாகனம் மோதியிருக்கிறது.

ஓர் ஐந்து வயது சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது சிறுவனுக்கு நினைவு இருந்திருக்கிறது.

இச்சம்பவம் பிஷானில் இருக்கும் மிட்வியூ சிட்டி கட்டடத்தில் உள்ள மேப்பல் பேர் பாலர்பள்ளிக் கிளையில் திங்கட்கிழமையன்று நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு 20 சின் மிங் லேனில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.

கவனமின்றி வாகனத்தை ஓட்டி பிறருக்கு அபாயம் விளைவித்ததன் தொடர்பில் 62 வயது ஆண் வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.