சிங்கப்பூரில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாகப் புதிய தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்து உள்ளது. 12 மாதங்களில் பதிவான ஆக அதிகமான விற்பனை இது.
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து, கடந்த மே மாதம் சொத்து மேம்பாட்டாளர்கள் 1,038 வீடுகளை விற்பனை செய்தனர். சென்ற எப்ரல் மாதம் விற்பனையான 887 வீடுகளைக் காட்டிலும் இது 17 விழுக்காடு அதிகம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் விற்பனையான 1,355 வீடுகளிலிருந்து விற்பனை 23.4% குறைந்தது.
மொத்தம் 1,595 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அவை ஏப்ரல் மாத எண்ணிக்கையைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகம்.

