மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

2 mins read
d0f261dc-f3b2-47b6-a094-1ceb8bc9d4d4
-
multi-img1 of 2

உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யான சீ கீ ஊன், மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­யாக அதி­ப­ரால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அக்­டோ­பர் முதல் தேதி­யில் இருந்து அவர் இந்­தப் பொறுப்பை ஏற்­க­வுள்­ளார்.

நீதித்­துறை ஆணை­யர்­க­ளான கோ யிஹான் மற்­றும் தே ஹுவீ ஹுவீ, உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­களாக அக்­டோ­பர் முதல் தேதி­யில் இருந்து நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

நீதித்­துறை ஆணை­யர் தே, அக்­டோ­பர் முதல் தேதி­யில் இருந்து மூன்று ஆண்­டு­க­ளுக்கு குடும்ப நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கப் பொறுப்பு வகிக்­க­வுள்­ளார். நீதி­பதி டெபி ஓங் சியூ லிங்­கி­டம் இருந்து அவர் இப்­பொ­றுப்பை ஏற்­கி­றார்.

மூன்று மூத்த நீதி­ப­தி­கள் அதிபர் ஹலிமா யாக்­கோப்­பால் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

நீதி­பதி டான் சியோங் தாய் (ஜூன் 22ஆம் தேதி பொறுப்­பேற்­கி­றார்), நீதி­பதி ஜூடித் பிர­காஷ் (2024 ஜன­வரி 2ஆம் தேதி பொறுப்­பேற்­கி­றார்), நீதி­பதி லீ சியூ கின் (2024 ஜன­வரி 30ஆம் தேதி பொறுப்­பேற்­கி­றார்) ஆகி­யோர் அந்த மூவர்.

அவர்­கள் மூவ­ரும் 2027 ஜன­வரி 4ஆம் தேதி­வரை மூத்த நீதி­ப­தி­க­ளாக பணி­யாற்­ற­வுள்­ள­னர்.

இதற்­கி­டையே, திரு அலெக்ஸ் வோங் லி கோக், உச்ச நீதி­மன்ற நீதித்­துறை ஆணை­ய­ராக ஆகஸ்ட் முதல் தேதி­யில் இருந்து ஈராண்­டு­களுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

நீதி­பதி சூ ஹான் டெக், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக 2024 பிப்­ர­வரி 21ஆம் தேதி­யில் இ­ருந்து ஈராண்­டு­க­ளுக்கு மீண்டும் ­நி­ய­ம­னம் செய்­யப்­பட்­டு உள்­ளார். 2019 பிப்­ர­வரி 20ஆம் தேதி ஓய்­வு­பெற்­ற­தைத் தொடர்ந்து, உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக அவர் மீண்டும் நி­ய­ம­னம் செய்­யப்­பட்டி­ருப்­பது இது நான்­கா­வது முறை.