தந்தையிடம் வசிக்க வந்த பிள்ளைகள்; முன்னாள் மனைவியிடம் பராமரிப்பு தொகை கோரும் கணவன்

தந்தையிடம் வசிக்க வந்த பிள்ளைகள்; முன்னாள் மனைவியிடம் பராமரிப்பு தொகை கோரும் கணவன்

2 mins read
c2dc3b1b-da5a-43f6-9f8a-4eb4ee23fbbc
-

ஆட­வர் ஒரு­வர் அவ­ரது இரண்டு பிள்­ளை­களும் முன்­னாள் மனை­வி­யு­டன் தங்­கி­யி­ருந்­த­போது தமது பிள்­ளை­க­ளின் பரா­ம­ரிப்பு தொகை­யாக மாதம் $2,640 முன்­னாள் மனை­விக்கு கொடுக்க வேண்­டும் என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

தற்­பொ­ழுது அந்த இரண்டு பிள்­ளை­களும் தந்­தை­யு­டனே தங்­கி­யி­ருப்­பது என வந்­து­விட்­ட­னர். இந்­நி­லை­யில், தான் முன்­னாள் மனை­விக்கு மாதந்­தோ­றும் கொடுத்து வந்த $2,640ஐ அவர் இனி தனக்­குக் கொடுக்க வேண்­டும் என்று அந்த ஆட­வர் நீதி­மன்­றத்­தில் மனுச் செய்­தார்.

இந்த மனுவை விசா­ரித்த மாவட்ட நீதி­பதி ஏட்­ரி­யன் சியோங், குழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்­புக்­காக முன்­னாள் மனைவி தமது முன்­னாள் கண­வ­ருக்கு மாதம் $1,000 கொடுக்க வேண்­டும் என்று தீர்ப்­ப­ளித்­துள்­ளார்.

இந்­தத் தம்­ப­தி­ய­ரின் மண­வாழ்க்கை 2018ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­தது. அப்­பொ­ழுது அவர்­க­ளின் இரண்டு பிள்­ளை­களும் தங்­கள் தாயா­ரு­டன் இருப்­ப­தென முடி­வெ­டுத்­த­னர்.

பின்­னர், 2021ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் அந்த இரு பிள்­ளை­களும் தங்­கள் முடிவை மாற்­றிக்­கொண்டு தந்­தை­யி­டம் வந்­த­னர்.

அதைத் தொடர்ந்து தான் முன்­னாள் மனை­வி­யி­டம் பிள்­ளை­களை பரா­ம­ரிக்க கொடுத்து வந்த தொகையை இனி முன்­னாள் மனைவி தமக்­குக் கொடுக்க வேண்­டும் என்று கூறி­னார்.

ஆனால், தர­குத் தொகை அடிப்­ப­டை­யில் தமக்­குக் கிடைக்­கும் வரு­மா­னம் சரா­ச­ரி­யாக $3,000 மட்­டுமே என நீதி­மன்­றத்­தில் முன்­னாள் மனைவி தெரி­வித்தார். இத­னால், தம்­மால் மாதம் $790, அதா­வது அவ­ரது சரா­சரி மாத வரு­மா­னத்­தில் கால் பங்­கு­தான் தர முடி­யும் என்று அவர் வாதிட்­டார்.

அவர் தான் வழக்­க­மாக பார்த்து வந்த வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு விட்­ட­தா­க­வும் தற்­பொ­ழுது நிதி ஆலோ­ச­க­ராக பணி­பு­ரி­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

மேலும், தான் நல்ல வரு­மா­னம் ஈட்டி வந்த காலத்­தில் பிள்­ளை­க­ளின் செல­வு­களை சம­மாக பங்­கிட்டு கொள்ள ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் தம்­மீது முன்­னாள் கண­வர் தொடுத்த புகா­ரால் தான் முந்­தைய வேலையை இழந்­த­தா­கக் கூறி­னார்.