ஊழியர் தேவை குறைகிறது

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர் தேவை குறைந்து வரு­வ­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட அண்­மைய சந்தைத் தர­வு­கள் தெரி­வித்­துள்­ளன. மேலும் பொரு­ளி­யல் நிச்­ச­ய­மற்­ற­தன்மை, உல­க­ளா­விய சிரமங்­களை கருத்­தில்­கொண்டு வேலைச் சந்தை மேலும் சிக்­க­லா­கும் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்­த­னர்.

மொத்த வேலை­வாய்ப்­பு­கள் மெது­வான வேகத்­தில் விரி­வடைந்­தன. ஆட்­கு­றைப்பு அதி­க­ரித்­தது. வேலை காலி­யி­டங்­கள் இன்­னும் அதி­க­மாக இருந்­த­போதி­லும் மனி­த­வள அமைச்­சின் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டுக்­கான ஊழி­யர் சந்தை அறிக்­கை­யில் ஊழியர் தேவை தொடர்ந்து நான்­கா­வது காலாண்­டா­கக் குறைந்­துள்­ளதாகக் கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டில் 2,990ஆக இருந்து ஆட்­கு­றைப்பு எண்­ணிக்கை தொடர்ந்து மூன்றா­வது காலாண்­டாக சென்ற காலாண்­டில் 3,820 ஆக உயர்ந்தது.

எனி­னும், இறுக்­க­மான வேலைச் சந்­தையை எடுத்­துக்­காட்­டும் வகை­யில், பணி­நீக்­கம் செய்­யப்­பட்ட 71.7 விழுக்­காடு சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் ஆறு மாதங்­க­ளுக்­குள் வேலை தேட முடிந்­தது.

வேலை­யின்மை விகி­த­மும் குறை­வாகவே இருந்­தது.

பணி­நீக்­கம் முக்­கி­ய­மாக மின்­னி­யல் உற்­பத்தி (670 முதல் 1,190 வரை), தக­வல் தொடர்பு துறை (370 முதல் 560 வரை) நிதிச் சேவை­கள் (260 முதல் 540 வரை) போன்ற வெளி­நா­டு­கள் சார்ந்த துறை­களில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரில் வேலை பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை 33,000 உயர்ந்­துள்­ளது. இது தொடர்ந்து ஆறா­வது காலாண்டு வளர்ச்­சி­யைக் குறிக்­கிறது. இதில் இல்லப் பணிப்­பெண்­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

நிதிச் சேவை­கள், தொழில்­சார் சேவை­கள், சுகா­தா­ரம், சமூக சேவை­கள் ஆகிய துறை களின் வளர்ச்­சி­யால் வேலை­வாய்ப்­புப் பெற்ற சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்­துள்­ளது.

மீத­முள்ள 30,200 பேர் கட்­டு­மா­னம், உற்­பத்­தித் தொழில்களில் வேலை­பெற்­றுள்ள குடி­யு­ரிமை இல்­லாத ஊழி­யர்­கள். குடி­யுரிமை இல்­லா­தோர் வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை கொவிட்-19 பர­வ­லுக்கு முந்­திய நிலையை தாண்­டி­யுள்ளது இதுவே முதல்­மு­றை­.

எனி­னும், சிங்­கப்­பூ­ரில் மொத்த வேலை­வாய்ப்­பின் அளவு, தொற்­று­நோய் பர­வலுக்கு முந்­தைய நிலை­யை­விட 3.8% கூடி­யி­ருந்­தா­லும், முந்­தைய காலாண்­டின் 43,500 அதி­க­ரிப்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்தக் காலாண்டின் வளர்ச்சி மித­மா­னது.

ஊழி­யர் தேவை குறை­வ­தற்­கான அறி­கு­றி­களும் இருந்­தன.

வேலை வாய்ப்­பு­கள் நான்­கா­வது காலாண்­டாக மார்ச் மாதத்­தில் 99,600 குறைந்­தன.

எனி­னும், சில்­லறை விற்பனை, உணவு, பான சேவைத்­து­றை­களில் குடி­யு­ரிமை இல்­லா­தோ­ருக்­கான வேலை­வாய்ப்பு, தொற்று­நோய் பர­வ­லுக்கு முந்திய நிலையை இன்­னும் எட்­டா­த­தால் உயர்­வா­கவே இருந்தது.

வேலை­யில்­லா­தோர், காலி இடங்­க­ளுக்­கான விகி­தா­சா­ரம் தொடர்ந்து 2.28 (100 நபர்களுக்கு 228 வேலை­கள்) ஆக உள்­ளது. ஆனால் கடந்த 2022 டிசம்­ப­ரில் 2.33 ஆக இருந்த இந்த விகி­தா­சா­ரம் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் குறைந்­துள்­ளது.

இருப்­பி­னும், ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­த­மும் (1.8%) சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் நீண்ட கால வேலை­யின்மை விகி­த­மும் (0.6%) இந்த ஆண்டு மார்ச்­சில் குறை­வா­கவே இருந்தது.

சிங்­கப்­பூ­ரில், நீண்டகால வேலை­யின்மை என்­பது பதி­னைந்து வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­துள்­ள­வர்­கள் 25 வாரங்­கள், கிட்­டத்­தட்ட 6 மாதங்­கள் அல்­லது அதற்கு மேல், வேலை­யில்­லா­மல் இருப்­பது என வரை­ய­றுக்­கப்­ப­டு­கிறது. கல்வி ஒரு வேலை­வாய்ப்­பாக அங்­கீ­கரிக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லான வயது மற்­றும் கல்­விப் பிரி­வு­களில், சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் குறை­வா­கவே உள்­ளது அல்­லது முன்­னேற்­றம் கண்­டுள்­ளது.

வெளிப்­பு­றத் தேவை, உல­கப் பொரு­ளி­ய­லைக் கருத்­தில்­கொண்டு, வேலை­வாய்ப்பு வளர்ச்சி மேலும் மித­ம­டை­யும் என்று மனி­த­வள அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!