சாட்சியத்தை மறைக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்

மியன்­மார் பணிப்­பெண் பியாங் ங்காய் டோனை தனது மக­ளு­டன் சேர்ந்து சித்­தி­ர­வதை செய்து மர­ணத்­துக்­குக் கார­ண­மாக இருந்த மாது கண்­கா­ணிப்பு கேமரா படங்­களை மறைக்க முயன்­ற­தாக ஒப்­புக்­கொண்­டார்.

பீஷான் வீட்­டில் குடும்­பத்­தி­னர் பொருத்­திய கேம­ரா­வில் பதி­வா­கி­யி­ருந்த துன்­பு­றுத்­தலுக்கு ஆதா­ர­மான படங்­களை மறைக்க தனது மரு­ம­கன் கெவின் செல்­வத்தை தூண்­டிய ஒரு குற்­றச்­சாட்டை 64 வய­தான பிரேமா எஸ். நாரா­ய­ண­சாமி ஒப்­புக்­கொண்­டார். அவர்­கள் வீட்­டில் உள்ள ‘சிசி­டிவி’இலி­ருந்து ‘ஹார்ட் டிஸ்க் டிரைவை’ அகற்­று­மாறு கெவின் செல்­வத்­தி­டம் அவர் கூறி­யுள்­ளார்.

முன்­னாள் காவல்­துறை அதி­கா­ரி­யான செல்­வம், இந்த துன்­பு­றுத்­தல் தொடர்­பாக பல குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்கு கிறார். அவ­ரது வழக்கு ஜூலை மாதம் விசா­ரணைக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

2015 மே 28ஆம் தேதி அக்­கு­டும்­பத்­தில் வேலை செய்­யத் தொடங்­கி­ய­போது 39 கிலோ இருந்த பியாங், 2016 ஜூலை 26ஆம் தேதி உயி­ரி­ழிந்தபோது 24 கிலோவே இருந்­தார்.

ஏற்­கெ­னவே பட்­டினி போடப்­பட்­டி­ருந்த 24 வயது பெண், பிரே­மா­வா­லும் அவ­ரது மகள் 41 வயது மகள் காயத்­திரி முரு­கை­ய­னா­லும் தாக்­கப்­பட்­ட­தால் ஏற்­பட்ட காயங்­க­ளி­லி­ருந்து மீள­வில்லை.

பணிப்­பெண்ணை வேண்­டு­மென்றே காய­மேற்­ப­டுத்­திய 47 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் தாக்க முயன்ற ஒரு குற்­றச்­சாட்­டை­யும் ஒப்­புக்­கொண்ட பிரே­மா­வுக்கு ஜன­வரி மாதம் 14 ஆண்­டு­சிறை விதிக்­கப்­பட்­டது.

பிரேமா முத­லில் கொலைக் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கி­னார். பின்­னர் அவர் மீது சுமத்­தப்­பட்ட கொலைக் குற்­றச்­சாட்டு நீக்­கப்­பட்­டது. ஆனால் அக்­குற்­றச்­செ­ய­லி­லி­ருந்து அவர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

செல்­வத்­தி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்ற காயத்­தி­ரிக்கு 2021 ஜூன் 22ஆம் தேதி 30 ஆண்­டு­கள் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டது.

2016 ஜூனுக்­கும் ஜூலைக்கும் இடைப்­பட்ட காலத்­தில் பீஷானில் உள்ள அவர்­க­ளது மூவறை அடுக்­கு­மாடு வீட்­டில் பொருத்­தப்­பட்ட கேம­ராக்­களில் பதி­வான படங்­கள், பிரேமா பாதிக்­கப்­பட்ட பெண்ணை எட்டி உதைப்­ப­தை­யும், தரை­யில் இருந்து அவ­ரைத் தலை­மு­டி­யைப் பிடித்து மேலே இழுத்து, தலையை வலுக்­கட்­டா­ய­மாக வேக­மாக ஆட்­டு­வ­தை­யும் காட்­டின. பியாங்கை மூங்­கில் கம்பு, வெட்­டும் பலகை போன்­ற­வற்­றால் அவர் அடித்­துள்­ளார்.

கடைசி 12 நாள்­கள், ​​​​இர­வில் பிரேமா கட்­டி­லில் படுத்­தி­ருந்த அதே அறை­யில் தரை­யில் தூங்­கிய அப்­பெண் சன்­னல் கம்­பி­யு­டன் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

2016 ஜூலை 25ஆம் தேதி இரவு மிக­வும் மெது­வாக சலவை செய்­த­தற்­காக பணிப்­பெண்ணை காயத்­தி­ரி­யும் பிரே­மா­வும் தாக்­கி­யுள்­ள­னர். மறு­நாள் காலை­யில் காயத்­திரி அவ­ரது கழுத்தை நெரித்­துள்­ளார். சில மணி நேரம் கழித்து, அவர் அந்த வீட்­டில் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர் அறி­வித்­தார்.

வீட்­டில் உள்ள கண்­கா­ணிப்பு கேமரா துன்­பு­றுத்­தல் காட்­சி­க­ளைப் பதிவு செய்­தி­ருக்­கும் என்­பது பிரே­மா­வுக்கு தெரி­யும்.

அந்­தப் படங்­களை காவல்­து­றை­யி­னர் பெறு­வ­தைக் தடுக்­கும் முயற்­சி­யாக, கேம­ரா­வில் இருந்து ரெக்­கார்­டரை கழற்றி தன்­னி­டம் தரு­மாறு செல்­வத்­தி­டம் கூறி­னார். பிறகு அதை வீட்­டுக்கு வந்த ​தனது மரு­ம­கள் இச­பெல்­லா­வின் பையில் மறைத்து வைத்­தார்.

இச­பெல்லா அதன் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­தி­ராத நிலை­யில், “அதை ஏதா­வது செய்,” என்று பிரேமா கூறி­னார். இச­பெல்லா அதனை தனது கண­வ­ரி­டம் கொடுத்­தார். அவர் அதை நண்­ப­ரி­டம் கொடுத்­தார். புலா­யாய்­வுத் துறை­யி­னர் அவர்­க­ளது வீட்­டுக்­குச் சென்­ற­போது இச­பெல்­லா­வும் அவ­ரது கண­வ­ரும் அதை காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

துணை அரசு வழக்கறிஞர் சீன் தே பிரே­மா­வுக்கு குறைந்­த­பட்­சம் மூன்று ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கக் கோரி­னார். இறு­தி­யில் மர­ணத்தை ஏற்­ப­டுத்­திய மிகக் கொடூ­ர­மான பணிப்­பெண் துன்­பு­றுத்­தல் வழக்­கு­களில் ஒன்­றான இதில் ஆதா­ரத்தை மறைக்க முயன்­றுள்­ளார் என்று அவர் கூறி­னார்.

தீர்ப்பு ஜூன் 26ஆம் தேதி வழங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!