விபத்து: தந்தையை பொறுப்பேற்க வைத்தவருக்கு 17 வார சிறை

1 mins read
8411b42e-8603-48e1-bba4-029256341cf2
-

தான் தொடர்­பு­டைய விபத்­துக்­காக தனது தந்­தை­யைப் பொறுப்­பேற்க அனு­ம­தித்த பெண்­ணுக்கு 17 வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரது சொந்த காரில் உள்ள கேமரா மூலம் அவ­ரது பொய் அம்­ப­ல­மா­னது.

27 வய­தான ஆட்ரி ஓங் ஹூய் லிங் நீதி­யின் போக்கை திசை திருப்­பி­யது உட்­பட நான்கு குற்­றச்­சாட்­டு­களில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

கவ­னக்­கு­றை­வான செய­லால் கடு­மை­யான காயத்தை ஏற்­ப­டுத்­திய குற்­றத்­திற்­காக, சிறை­யி­லி­ருந்து வெளி­வ­ரும் நாளி­லி­ருந்து இரண்டு ஆண்டு ­க­ளுக்கு வாக­னம் ஓட்­டு­வதற்கு ஓங் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரது வழக்­க­றி­ஞர் திரு. எஸ்.எஸ்.தில்­லன், அவ­ரது தந்தை, தந்தை பாசத்­தில் செயல்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

ஆகஸ்ட் மாதம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­க­வுள்ள டேவிட் ஓங், நீதி­யின் போக்கை திசை திருப்­பு­வது உட்­பட பல குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­கி­றார். 57 வய­தான அவர் புதன்­கிழமை தனது மக­ளு­டன் நீதி­மன்­றத்­தில் காணப்­பட்­டார்.

சம்­ப­வத்­தின்­போது கிராப் வாடகை வண்டி ஓட்­டு­ந­ரா­கப் பணி­பு­ரிந்த தந்தை, 2019ஆம் ஆண்டு தெம்­ப­னிசில் நடந்த விபத்­துக்­குப் பிறகு ஐந்து நாட்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

அந்த ஆண்டு அக்­டோ­பர் 15ஆம் தேதி, செல்­லு­ப­டி­யா­கக் கூடிய வாகன ஓட்­டு­நர் உரி­மம் இல்­லா­விட்­டா­லும், தனது தந்தை வேலைக்­காக வாட­கைக்கு எடுத்த காரை ஓங் ஓட்­டி­னார். டேவிட் ஓங்­கும் அவ­ரு­டன் காரில் இருந்­தார்