8 பலதுறை மருந்தகங்களை நாடலாம்: சுகாதார அமைச்சு

8 பலதுறை மருந்தகங்களை நாடலாம்: சுகாதார அமைச்சு

2 mins read
9bce4bcb-4cfa-4de2-a207-df6d56b2c01b
-

கொவிட்-19 தடுப்பூசிச் சேவைகளுக்கு இனி முன்பதிவு தேவை இல்லை

ஜூலை 1 முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் எட்டு பல­துறை மருந்­த­கங்­களில் மட்­டுமே கிடைக்­கப்­பெ­றும். அவற்­றில் 12 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டை­யோ­ருக்கு ஃபைசர் பயோன்டெக்­கின் கொமிர்­னாட்டி தடுப்­பூசி வழங்­கப்­படும்.

சில மருந்­த­கங்­களில், 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்கள் கொமிர்­னாட்டி தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ல­லாம். 6 மாதத்­துக்­கும் 4 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு மொடர்­னா­வின் ஸ்பைக்­வெக்ஸ் தடுப்­பூசி வழங்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் பெற விரும்­பு­வோர் இனி முன்­ப­திவு செய்­ய­வேண்­டி­ய­தில்லை.

தகு­தி­பெ­று­வோர் ஜூலை 1 முதல் 8 பல­துறை மருந்­த­கங்­களில் எதில் வேண்­டு­மா­னா­லும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

புக்­கிட் பாத்­தோக், யூனோஸ், கேலாங், காலாங், பைனி­யர், பொங்­கோல், தெம்­ப­னிஸ், உட்­லண்ட்ஸ் ஆகி­ய­வற்­றில் அமைந்­துள்ள பல­துறை மருந்­த­கங்­கள் அந்­தச் சேவையை வழங்­கும்.

பல­துறை மருந்­த­கங்­களில் தடுப்­பூ­சிச் சேவை­களை முறைப்­படுத்­தும் நோக்­கில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

கொவிட்-19 வழக்­க­மான தொற்­றாகி, தடுப்­பூ­சிக்­கான தேவை நிலை­யா­கி­வ­ரும் வேளை­யில் வளங்­களை மிகச் சிறந்த வகை­யில் பயன்­ப­டுத்­து­வது நோக்­கம்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து பாது­காக்க, தடுப்­பூசி முக்கியம் என்பதால் தகு­தி­பெ­றும் அனை­வ­ரும் தடுப்­பூ­சி­ போட்டுக்கொள்ளுமாறு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கொவிட்-19 நோய் தொற்றி­னால், கடு­மை­யான பாதிப்­பி­ல் இ­ருந்­தும் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறு­வ­தி­லி­ருந்­தும் பாது­காத்­துக்­கொள்ள, 60 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மூத்­தோ­ரும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யோ­ரும் தாங்­கள் கடை­சி­யா­கக் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஓராண்­டுக்­குப் பிறகு ஆக அண்­மைய இரு­வகை ஆற்­றல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்றனர்.

தகு­தி­பெ­று­வோர் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் பெற்­றுக்­கொள்ள, பல­துறை மருந்­த­கங்­க­ளைத் தவிர ஒன்­பது கூட்­டுச் சோதனை, தடுப்­பூசி நிலை­யங்­களில் ஏதே­னும் ஒன்­றுக்கு நேர­டி­யா­கச் செல்­ல­லாம் அல்­லது பங்­கேற்­கும் பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கத்­தைத் தொடர்­பு­கொண்டு முன்­ப­தி­வு­செய்த பின்­னர் மருந்­த­கத்­திற்­குச் செல்­ல­லாம்.

தடுப்பூசி வழங்கும் அரு­கில் உள்ள இடத்­தைப் பற்­றி­யும் அதன் செயல்­பாட்டு நேரங்­க­ளைப் பற்­றி­யும் தெரிந்­து­கொள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் gowhere.gov.sg/vaccine எனும் இணை­யத்­தளத்தை நாட­லாம்.